திங்கள், 4 ஜூன், 2018

ஊடகங்கள் எதிர்கட்சிகளுக்கு எதிர் கட்சிகளாக இருக்கிறார்கள் ... கேள்வி கேட்டா வாயில சுடுவீங்களா ?


Boopathi PT :  இப்படி நிறைய கேள்விகள்
இருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல கேள்வி
கேட்டா வாயிலே சுடுவோம்னு இப்ப பதில் சொல்லி இருக்கு தமிழக அரசு. இருக்கு... அதுக்கும் இருக்கு, துப்பாக்கிக் குண்டுகளைவிட மக்களோட கேள்விகளுக்கு சக்தி அதிகம்னு புரிய ரொம்ப நாள் ஆகாது!
மற்ற கட்சிகளைவிட பாஜக-வை அதிகமாக விமர்சனம் செய்வது ஏன்?
மற்ற கட்சிகளைவிட மதவாதத்தை வைத்து ஆட்சி செய்கிற பாஜக மிகவும் ஆபத்தானது. அதனால்தான் அதை அதிகமா எதிர்க்க வேண்டியிருக்கு. ஒரு சிறந்த பத்திரிகைக்காரன் எப்பவுமே எதிர்க்கட்சியாதான் இருக்கணுமனு லங்கேஷ் சொல்வாரு. இளைஞனா இருக்கும்போது ஆழமா மனசுல பதிஞ்ச விஷயம் இது. எந்தக் கட்சி தப்பு பண்ணாலும் ஒரு குடிமகனா நிச்சயம் எதிர்ப்பேன்.” (பிரகாஷ்ராஜ், பெருமை மிகு இந்து விரோதி, தேச துரோகி.)  “ஒரு சிறந்த பத்திரிகைக்காரன் எப்பவுமே எதிர்க்கட்சியாதான் இருக்கணும்”,

ஆனா பாருங்க இங்க இருக்கிற மீடியாகாரங்க - எதிர் கட்சிக்கு எதிர்கட்சியா இருக்கிறார்கள்.
இங்க எல்லா மீடியாவும் புது அரசியல்வாதிகளுக்கு அக்னிப் பரிட்சை, வெல்லும் சொல்,
வியூகம், கேள்விக்கென்ன பதில், புதுப்புது அர்த்தங்கள், நேர்பட பேசு என்கிற பெயரில் அட்வர்டைஸ்மென்ட் ஏஜன்சி வேலைதான் பாத்துகிட்டு இருக்காங்க!!!
தமிழகத்தில் மீடியா செய்யும் வேலையை சோசியல் மீடியதான் செய்து கொண்டு இருக்கிறது , அனைத்து கட்சிகளை சார்ந்த போராளிகளுக்கும் காலை வணக்கம்.</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக