சனி, 9 ஜூன், 2018

தமிழகத்தில் ஓராண்டில் 50,000 சிறிய தொழிற்சாலைகள் மூடல்.. பணமதிப்பிழப்பு - லஞ்சம்- ஜி எஸ் டி

Swathi K : பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி பிரச்சனைகளால், தமிழகத்தில்
மட்டும் 50,000 சிறிய தொழிற்சாலைகள் மூடல்.. ஒரே ஆண்டில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு, மத்திய அரசு நடவடிக்கையால் 11,000 கோடி முதலீடும் சரிந்தது - சட்டப்பேரவையில் அரசு தகவல்..
நாடு முழுவதும் இது தான் நடந்து வருகிறது.. நம்ம நிறைய நேரம் GDP (உள்நாட்டு உற்பத்தி) நம்பர் மட்டுமே பேசுரோம்.. GDP கூடுவது, குறைவது இருக்கட்டும்.. யார் மூலமாக நாட்டுக்கு வர வேண்டிய GDP குறைந்தது??? விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள் மூலம் நாட்டுக்கு வர வேண்டிய வருவாய் கடந்த இரண்டு வருடமாக கணிசமாக குறைந்து இருக்கிறது.. அந்த sectorல் லட்சக்கணக்கான வேலை இழப்பு, கடந்த 2 வருடத்தில் 6.78 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு விவசாயம், சிறு, குறு தொழில்கள் செய்யும் மக்களுக்கு. இதெல்லாம் இவர்களின் "பண மதிப்பிழப்பு" மற்றும் "குறைப்பிரசவ GST"யினால். இது எல்லாமே மோடியின் கார்ப்பரேட் அஜென்டா.
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்களை ஒழித்து அந்த இடத்தில் கார்பரேட் கம்பெனிகளை உக்கார வைக்கும் முயற்சியில் மோடி & கோ வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறார்👿. அதற்கான Transformation (மாற்றம்) தான் நடந்து வருகிறது. இந்த Transformation முடியும் போது இந்தியாவின் GDP ஓரளவுக்கு கூடும்.. ஆனால் அப்போது விவசாயம், சிறு, குறு, சுய தொழில்கள் ஒழிந்து இருக்கும்.. கார்ப்பரேட் கை முற்றிலுமாக ஓங்கி இருக்கும்😢.
2015: (நாட்டின் வருவாயில்)
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள்- 51%
கார்ப்பரேட் - 33%
மற்றவை - 16% (public sector, etc.)
2018 (மார்ச் வரை): (நாட்டின் வருவாயில்)
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள் - 39%

கார்ப்பரேட் - 49%
மற்றவை - 12%
2019 டிசம்பர் - (projected)
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள் - 30-35%
கார்ப்பரேட் - 60-65%
மற்றவை - 5-8%
விரிவான செய்தி::
கடந்த 2016-17ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18ம் நிதியாண்டில் 2 லட்சத்து 17 ஆயிரமாக மாறியுள்ளது. (50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது). அதே போன்று தொழில் முதலீடும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.11 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. கடந்த 2016-17ல் 36 ஆயிரத்து 221 கோடியாக இருந்த தொழில் முதலீடு 2017-18ம் நிதியாண்டில் 25 ஆயிரத்து 373 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த 2016-17ல் சிறு குறு தொழில் நிறுவனங்களில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 617 பேர் பணிபரிந்து வந்துள்ளனர். 2017-18ல் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று கொள்கை விளக்க குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மோசமான நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது.. வாழ்க மோடி..
Reference:
https://data.gov.in/…/gdp-india-and-major-sectors-economy-s…
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409354
- Swathi K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக