வியாழன், 28 ஜூன், 2018

மும்பை.. நொறுங்கி விழுந்த விமானம் - பைலட்டுகள் உள்பட 5 பேர் உயிரழப்பு . குடியிருப்பு பகுதியில்..

மும்பையில் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்த விமானம் - பைலட்டுகள் உள்பட 5 பேர் பலிமகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் இன்று திடீரென சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. #MumbaiPlaneCrash மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் இன்று பிற்பகலில் நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள், 2 எஞ்சினீயர்கள் மற்றும் தரையில் இருந்த நபர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக