ஞாயிறு, 10 ஜூன், 2018

பாபா ராம்தேவுக்கு 455 ஏக்கர் அரசு நிலத்தை தாரை வார்த்த யோகி அரசு ...

பதஞ்சலிக்கு 455 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!    மின்னம்பலம்: பதஞ்சலி நிறுவனத்துக்கு 455 ஏக்கர் நிலத்தை
உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது.
வேகமாக விற்பனையாகும் நுகர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் மிகப் பெரிய உணவு மற்றும் மூலிகைப் பூங்கா அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. முந்தைய அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், பாபா ராம்தேவின் ஆதரவு அரசான பாஜக கடந்த வாரத்தில் இந்த உணவுப் பூங்காவுக்கு அனுமதி மறுத்தது.
இதையடுத்து இந்நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகி ஆதித்யநாத் அரசைக் குற்றம்சாட்டி ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், உணவு மற்றும் மூலிகைப் பூங்காவை நகர்ப்புறத்துக்கு வெளியே மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரப் பிரதேச அரசு யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் 455 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. மேலும், ஒன்றிய அரசிடமிருந்து ரூ.150 கோடி மானியம் எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், நாங்கள் அரசிடம் எந்தச் சலுகையும் எதிர்பார்க்கவில்லை எனப் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக