செவ்வாய், 26 ஜூன், 2018

இலங்கையில் 40,000 வீடுகளைக் கட்ட சீனாவுக்கு அனுமதி ,, இந்தியா அதிருப்தி தெரிவிப்பு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகள்!மின்னம்பலம: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளைக் கட்ட சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40,000 வீடுகளைக் கட்டி தருவதற்கு, கடந்த மாதம் மீள்குடியேற்ற அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, சீனாவின் ரயில்வே பெய்ஜிங் இன்ஜினீயரிங் குரூப் லிமிடெட் மற்றும் யப்கா கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. மேலும், நிலச் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வீடுகளைக் கட்டி தருவதற்குப் தேசியப் பேரிடர் மேலாண்மை அமைச்சகமும் சீன நிறுவனங்களிடமே ஒப்படைத்துள்ளது.

இலங்கையின் தென்பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளச் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டா துறைமுகத்தையும் சீனா விரிவாக்கம் செய்ததற்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.
இந்திய அரசு, மானிய அடிப்படையில் இலங்கையில் 50,000 வீடுகளை கட்டித் தருவதற்கு நிதி உதவி வழங்கிய நிலையில் இலங்கையின் இந்தத் தொடர் நடவடிக்கைக்குக் கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக