வெள்ளி, 8 ஜூன், 2018

சென்னை ..சுவர் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

சுவர் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!மின்னம்பலம்: சென்னை அண்ணா நகரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமைந்தகரை கக்கன் நகர் பகுதியில் அன்சர் வீட்டைச் சுற்றி, 6 அடி உயரம் கொண்ட மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, இந்த மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், சகோதரர்களான அன்சார் மற்றும் பைரோஸ் ஆகியோரின் குழந்தைகளான தயான்(வயது 8), முஸ்கான்(வயது 4) ஆகிய இருவரும் அந்த மதில் சுவரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மதில் சுவர் இடிந்து அவர்களின் மீது விழுந்தது, சத்தம்கேட்டு அன்சர் ஓடிவந்து இருவரையும் மீட்க முயன்றனர். அவரால் மதில் சுவரை தூக்க முடியாததால் உடனே அண்ணாநகர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த அண்ணாநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். இதில் முஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தயான் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சொல்லும் வழியில் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக