வெள்ளி, 8 ஜூன், 2018

நடிகர் சிவகுமார் ஐ டியில் ... 2 டன் காண்டம் கண்டெடுத்தாராம்.. . இன்னொரு எஸ் வி சேகர்?

இன்னும் இவர் மீது ஏன் வழக்கு பாயவில்லை?
David P Shenba : சமீபத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி தவறாகப் பேசிய புரியும் பெண்கள் பற்றி அவதூறாகப் பேசிய இவருக்கு என்ன தண்டனை?
SV சேகருக்கு எழுந்த எதிர்ப்பு நினைவிருக்கலாம். இன்றுவரை தலைமறைவாக உள்ளார். ஆனால் இப்படி ஐடி துறையில் பணி
1. ஐடி நிறுவன கழிப்பறைகளில் ஆணுறை உள்ளது
மறுப்பு: நான் இதுவரை பல நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவன். இவர் சொல்வதுபோல எங்கும் ஆணுறை வழங்கப்படுவதில்லை.
2. ஐடி நிறுவனங்கள் வாரவிடுமுறைகளில் ஊழியர்களுக்கு கடற்கரை விடுதிகளில் ரூம் போட்டுத் தருகிறார்கள்
மறுப்பு: இப்படி எந்த நிறுவனமும் செய்வதில்லை. இது சட்டவிரோதம்கூட.
3. வாரவிடுமுறைகளில் ஊழியர்களுக்கு கடற்கரை விடுதிகளில் இறைச்சியும் மதுவும் பரிமாறப்படும்
மறுப்பு: பெரும்பான்மை மக்களின் உணவான இறைச்சியை premarital sex மற்றும் மதுவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இறைச்சி உணவு ஒழுக்கக்கேட்டுக்கு வழிவகுக்கும் என்ற போலியான கருத்தை பரப்பியுள்ளார்.
4. பத்து வருடம் இரவு கண்விழித்து உழைத்தால் மூளை சூடேறும்.

மறுப்பு: இரவு கண்விழிப்பது என்பது ஐடி துறையில் மட்டும் நடப்பதல்ல. நம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் முதல் காவலர்கள், தொழிற்சாலைபப் பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் என்று பலதரப்பட்ட துறையினரும் இரவு கண்விழித்து வேலை செய்கிறார்கள். இவர்கள் இரவு இயங்காவிட்டால் நம் வாழ்க்கை நின்றுபோகும். இவரது கருத்து இரவு உழைக்கும் மக்கள் ஒழுக்கம் தவற வாய்ப்பு உள்ளது என்பதுபோல உள்ளது.
5. ஆணும் பெண்ணும் அருகில் அமர்ந்து வேலை பார்ப்பார்கள்
மறுப்பு: ஆணும் பெண்ணும் அருகில் அமர்ந்தால் ஒழுக்கம் போய்விடும் என்கிற பிற்போக்குத்தனமான எண்ணத்தை பரப்புகிறார். ஆசிரியர்கள், மருத்துவர்கள் தொடங்கி இன்று எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்கெடுப்பு அதிகம் உள்ளது. இப்படிப் பட்ட சூழலில் உழைக்கும் பெண்கள் ஆண்களோடு பேசுவது, பழகுவது, அருகில் அமர்வது, பேருந்தில் கூட்ட நெரிசலில் பயணிப்பது போன்றவை தவிர்க்கவியலாத ஒன்று. இவரின் இந்தப் பேச்சு இதுபோல உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.
6. திருமணத்துக்கு முன் பலருடன் வாழ்ந்துவிடுகிறார்கள்
மறுப்பு: திருமணம் செய்வது, செய்யாமல் இருப்பது, பாலுறவு போன்றவை தனிநபர் விருப்பம். இதில் எதுவும் சார்/தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் என்னுடைய சொந்த மற்றும் நண்பர்களின் அனுபவப்படி இதுபோல நடப்பது வெகு வெகு அரிது. மேலும் இதுபோல எல்லாத்துறைகளிலும் இருப்பது மனித இயல்பே. ஐடி துறையில் மட்டும் இது நடப்பதுபோல இவர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் ஐடி துறையினர் மீது அவநம்பிக்கையையும் அறுவொறுப்பையும் ஏற்படுத்தும். எத்தனையோ ஐடி துறை ஊழியர்கள் சகா ஊழியர்களை மணந்துகொள்கிறார்கள். மாப்பிள்ளை/பெண் பார்க்கும்போதும் தனக்கு ஐடி துறை துணை வேண்டும் என்று கேட்கிறார்கள். இவர் சொல்வது உண்மை என்றால் அது எப்படி சாத்தியாம்? மேலும் பலர் தன தம்பி/தங்கையருக்கு தன அலுவலகத்திலேயே வேலை தேடுவதும் உண்டு. இவையெல்லாம் இவர் பேச்சில் துளியளவும் உண்மையில்லை என்பதையே காட்டுகிறது.
7. ஆண்களுக்கு இது பரவாயில்லை, ஆனால் பெண்களுக்கு?
மறுப்பு: ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்கிற கடைந்தெடுத்த ஆணாதிக்கச் சிந்தனையை இவர் தூக்கிப் பிடிக்கிறார். தாய்ப்பாசம், குடும்ப கரவம் போன்றவற்றை வைத்து காதல், பாலுறவு போன்ற அடிப்படை மனித உரிமைகளை எதோ குற்றம்போலச் சித்தரிக்கிறார். ஆணவக்கொலைகள் செய்பவர்களின் மனநியைல் நின்று பேசுகிறார்.
* மேற்சொன்ன காரணங்களால் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய இவரும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவியும் எல்லோரிடமும் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
* தன்னுடைய பேச்சு தவறானது என்று மறுப்பு வெளியிட வேண்டும்.
* தவறினால் சட்டப்படி நாம் இவர்களை எதிர்கொள்ள வேண்டும்.
If this person is not going to apologize, we have to organize protest, legal action and other initiatives. We should not give up because IT employees are no meaner than journalists or actors.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக