திங்கள், 4 ஜூன், 2018

தமிழக மருத்துவ துறைக்கு சாவுமணி ! நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி லாபம்.. மத்திய மாநில அரசுகளுக்கு எவ்வளவு கமிஷன்???

Troll Trousers 2.0 : நீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்.. தோராயமாக
மாணவர்களிடம் கொள்ளையடித்த நீட் கோச்சிங் பண விபரம் கடைசி பத்தியில்...
முக்கிய குறிப்பு : நீட் தகுதி தேர்வில் வேற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது.. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தாண்டு 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. ஆனால், இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே.. அதாவது, தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களில் 12.5% சதவீதம் பேருக்கு மட்டுமே மெடிகல் படிக்க இடம் கிடைக்கும்...
மாயை 1 : நீட் தேர்வு தகுதியை உறுதிப்படுத்துகிறது..
இந்திய அளவில் நீட் தேர்வை எழுதிய 12.69 லட்சம் பேரில் 7.14 லட்சம் பேர் கட்-ஆப் மார்க்வை விட அதிகமாக எடுத்து தகுதி பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களோ 52,965... அதாவது, நீட் கிளியர் செய்தவர்களில் வெறும் 7.4% சதவீத பேர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.. 2018 இல் பொது பிரிவினர் கட்ஆப் 720 க்கு 119 (16.5%) ; இடஒதுக்கீடு பிரிவினருக்கு 720 க்கு 96.. அதாவது நீட் தேர்வில் 16.5% & 13.3% சத மதிப்பெண்களை எடுத்தாலே தகுதி பட்டியலில் இடம் கிடைத்துவிடும்.. ஆனால், மாநில +2 பொது தேர்விலோ 50% சத மதிப்பெண்களை எடுத்தால்தான் தகுதி..

மாயை 2 : நீட்டால் தனியார் கல்லூரிகளில் டொனேஷனுக்கு வேட்டு..
நீட் கிளியர் செய்த 7.14 லட்சம் பேரில், அரசு கல்லூரிகள் & தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டாவில் மெரிட் அடிப்படையில் 50 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்கும்.. மீதமுள்ள 6.5 லட்சம் பேரிலிருந்து, மொத்தமுள்ள பத்தாயிரத்து சொச்சம் மேனஜ்மென்ட் கோட்டா இடங்களை வழக்கம்போல பணம் வாங்கிகொண்டு, டொனேஷன் வாங்கிக்கொண்டு தனியார் கல்லூரிகள் நிரப்பிகொள்ளலாம்.. எந்த தடையும் இல்லை..
மாயை 3 :சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்..
எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், தனியார் நீட் பயிற்சி மையங்களில் ஒரு ஆண்டோ, இரண்டாண்டோ, 2 லட்சம் ரூபாய்கள் தனியாக செலவழித்து படித்தால்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்...
நிஜம் : 12.6 லட்சம் பேர் நீட் கோச்சிங் படித்திருந்தால், அதில் வெறும், 60 ஆயிரம் பேர் மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைகிறது.. மீதமுள்ள 12 லட்சம் பேர் செலவழித்த தலா 2 லட்சம் ரூபாய்.. அதாவது மொத்தம் 24 ஆயிரம் கோடி ரூபாய் எள்ளு.. சரி, இதில் பாதியையே எடுத்துக்குங்க, நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி கொள்ளை லாபம்..
இதில் நீட் ஆதரவு மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பங்கு???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக