வெள்ளி, 8 ஜூன், 2018

சிம்பு : எங்களுக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

simbuசிம்பு எப்போதும் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு வெகுநாட்களாக இருந்து வந்தது.
இவர் கடைசியாக நடித்த ‘AAA’ படத்தில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் வெற்றிகரமாகவும், பிரச்சனை இல்லாமலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடித்ததை குறித்து பேசிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில்… “செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்துவிட்டது. அதற்கு மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.
< நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன். நீயெல்லாம் ரஜினியா என்று என்னை கிண்டல் செய்தனர். நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.

எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. நான் சின்ன வயதில் இருந்தே இப்படி இருந்து விட்டேன். அதனால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இருந்தும் என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன். மாற்றி கொண்டும் விட்டேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என் கஷ்டத்தை என் பெற்றோர்களை போல் ரசிகர்களாகிய நீங்களும் நன்றாக புரிந்து கொண்டீர்கள். அதற்கு நன்றி. என் அடுத்தடுத்த படங்கள் வரவிருக்கிறது. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்புடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி” என உருக்கமாக பேசியுள்ளார் சிம்பு.



nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக