செவ்வாய், 15 மே, 2018

EVM microchip program சில சதவிகித காங்கிரஸ் ஓட்டுக்கள் பாஜகவுக்கு சென்றன ...

Swathi K : எவ்வளவோ கோல்மால்கள், கேவலமான தேர்தல் பிரச்சாரம் செய்து
பிஜேபி வெற்றி பெற்று இருந்தாலும்.. இந்த தேர்தல் முடிவு சொல்லும் சில சேதிகள்..
1. ஓட்டு விகிதம் - காங்கிரஸ் 38%, பிஜேபி 36.2%.. காங்கிரஸ் பிஜேபியை விட கிட்டத்தட்ட 7 லட்சம் ஓட்டுக்கள் அதிகம் வாங்கி இருக்கிறது.. கண்டிப்பாக EVM microchip program மூலம் சில சதவிகித காங்கிரஸ் ஓட்டுக்கள் ஓட்டு எண்ணிக்கையின் போது பிஜேபிக்கு சென்று இருக்கும்.. அதையும் தாண்டி காங்கிரஸ் 1.8% ஓட்டுக்கள் பிஜேபியை விட அதிகம் பெற்று இருக்கிறது..
2. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி 43% ஓட்டுக்களும், காங்கிரஸ் 40% ஓட்டுக்களும் பெற்று இருந்தது.. பிஜேபி 43%ல் இருந்து 36% க்கு குறைந்து இருக்கிறது.. காங்கிரஸ் 40%ல் இருந்து 38%க்கு குறைந்து இருக்கிறது.. மோடி அலை 7% கீழ் நோக்கி சென்று இருக்கிறது.. 2014ல் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மக்களில் 22+ லட்சம் பேர் இப்போது பிஜேபிக்கு ஓட்டு போடவில்லை..
3. காங்கிரஸ் + ஜனதா கூட்டணி: இப்போது ஆட்சி அமைக்குமா என்று தெரியவில்லை.. (அமிட்ஷா ஜனதா or காங்கிரஸில் இருந்து சிலரை விலை கொடுத்து வாங்கி பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது).. ஆனால் 2019ல் இந்த கூட்டணிக்கு கர்நாடகாவில் மாபெரும் வெற்றி நிச்சயம்.. 2019 தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு கிடைத்த முதல் கூட்டணி இது.
4. இந்த தேர்தல் காங்கிரஸ்க்கு ஒரு நல்ல பாடத்தை கொடுத்து இருக்கும்.. இதே ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ்'வுடன் கூட்டணி பற்றி பேசிய போது மறுத்த காங்கிரஸ்.. இப்போது முதல்வர் பதவியே கொடுக்க ரெடி.. இந்த கூட்டணியை அப்போதே வைத்து இருந்தால் இப்போது 160+ இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.. பிஜேபி மாதிரி கிரிமினல் கட்சியை வீழ்த்த காங்கிரஸ் மாநில கட்சிகளை அரவணைக்க வேண்டிய நேரமிது..

5. என்னால் இப்பவும் உறுதியாக சொல்ல முடியும்.. EVM மூலம் பிஜேபிக்கு சில சதவிகித வோட்டுக்கள் அதிகம் கிடைத்து வருகிறது.. இது எளிதாக தேர்தல் முடிவை மாற்றி விடுகிறது.. EVM எதிர்த்து அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது..
6. பிஜேபியை எதிர்க்க தயாராக இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டிய நேரமிது.. மற்றவர்களின் பிளவில் மட்டுமே அரசியல் செய்து வரும் பிஜேபிக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரமிது..
இதெல்லாம் நடந்தால் தான் பிஜேபி மாதிரி கிரிமினல் கட்சியுடன் 2019ல் போட்டியாவது போட முடியும் எதிர்கட்சிகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக