வெள்ளி, 18 மே, 2018

முள்ளிவாய்க்கால் யாழ் மாணவர்கள் பேரணி.. குளிர்பானங்கள் சிற்றுண்டி வழங்கிய இராணுவத்தினர்

iranuvamm மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் iranuvamm1
முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி!image_9bd71afa23 மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் மென்பானங்கள் வழங்கிய இராணுவத்தினர் image 9bd71afa231வீரகேசரி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து  கொட்டும் மழையிலும்   குளிர்பானம் வழங்கியுள்ளனர்.
மின்னம்பலம்: முள்ளிவாய்க்கால்  தினமான இன்றைய (மே 18) தினத்தின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஒலிபெருக்கி வாகனங்களுடனும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் இன்றைய தினத்தை துக்க நாளாகவும், தமிழினப்படுகொலை நாளாகவும் வடமாகாண சபை அறிவித்துள்ளது .

9ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை நாளை அனுஷ்டிப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்று காலை 11 மணிக்கு நினைவுச் சுடரை ஏற்றினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடமாகாண சபைக்கும் நீண்ட காலமாக ஒருங்கிணைந்து இயங்குவதில் முரண்பாடுகள் இருந்துவந்தன. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுசரித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக