செவ்வாய், 15 மே, 2018

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எச்.டி. குமாரசாமி... பெரும்பான்மை இருப்பதாக விளக்கம்

Congress and JDS going to meet Governor today பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரியதை ஏற்றுக் கொண்டதை அடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து பாஜக வெற்றி பெறும் என்ற ஒரு தோற்றம் உருவானது.< எனினும் திடீரென டுவிஸ்ட் ஏற்பட்டது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி, தேவகௌடாவிடம் ஆதரவு கோரி போனில் ஆலோசனை செய்தார்.
அப்போது காங்கிரஸ் ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று கூறினார். சோனியாவின் இந்த ஆஃபரை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுநர் வஜுபாய் ருடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக இருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார், அவருடன் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ள கடிதத்தை காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்
Lakshmi Priya

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக