சனி, 5 மே, 2018

கனிமொழி :நீட் தேர்வு மைய வழக்கில் தமிழக அரசு ஏன் எந்த மூத்த வழக்கறிஞர்களையும் அனுப்பவில்லை?

பெரிய அளவில் பார்க்க கிளிக்
tamilehindu : நீட் தேர்வு மையங்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு எந்த மூத்த வழக்கறிஞரையும் அனுப்பவில்லை என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வெழுதும் தமிழக மாணவர்கள் பலருக்கு ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு குறித்து, தமிழக அரசு எவ்விதமான முன்னேற்பாடுகளை செய்யாததோடு, இவ்விவகாரத்தை கவனக்குறைவோடு கையாண்டுள்ளது. மணல் அள்ளும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், மூத்த வழக்கறிஞர்களை அனுப்பும் தமிழக அரசு. நீட் தேர்வு மையங்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எந்த மூத்த வழக்கறிஞரையும் அனுப்பவில்லை. இதுதான் தமிழக அரசுக்கு மாணவர்கள் மீதான அக்கறை. வழக்கம் போலவே, மத்திய அரசு தமிழக மாணவர்கள் விவகாரத்தில் எவ்விதமான அக்கறையும் செலுத்தவில்லை  என்பது வேதனைக்குரியது” என கனிமொழி பதிவிட்டுள்ளார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக