வியாழன், 24 மே, 2018

பூப்புனித விழாவில் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் கொண்டாட்டம்!

நேற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து, ஒருவர் இறந்துள்ளார். நிலைமை
நேரில் சந்தித்து ஆறுதல் சீரடையவில்லை. தூத்துக்குடியில் உணவும், குடிநீரும் இல்லாமல் அங்கே சென்ற பத்திரிக்கையாளர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கன்னியாக்குமரியில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இணையம் இல்லாததால் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமலும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று நடந்த அவர் கட்சிக்காரரின் மகளின் பூப்பூ நீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
tamil.oneindia.com-kalai-mathi.>சென்னை: நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேரில் சந்தித்து ஆறுதல்.... அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சியினரும் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமாளிப்பு... ஆனால் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட இதுவரை எட்டிப்பார்க்கவில்லை. மாறாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வரும் அவர்கள், தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக சமாளித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அமைச்சர்கள் கொண்டாட்டம்.... இந்நிலையில் சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், எம் ஆர் விஜயபாஸ்கர், சபாநாயகர் தனபால், எம்பி மைத்ரேயன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

 மக்கள் கோபம்... தமிழகமே கொந்தளிக்கும் நிலையில் துணை முதல்வரும் அமைச்சர்களும் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக