செவ்வாய், 8 மே, 2018

மன்னிக்கவே முடியாது ! இருட்டு அறையில் முரட்டு குத்து சமூகவிரோதிகளின் நச்சு பிரசார திரைப்படம்


வெப்துனியா: இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெற்றியடைந்தால் அது சினிமா உலகத்திற்கு நல்லதல்ல என இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
;கடந்த வெள்ளியன்று வெளியான சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி, யாஷிகா நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியும் தமிழகம் முழுவதும் ரூ.11 கோடிக்கும் மேலும் வசூல் செய்துள்ளது.
;இருப்பினும் இந்த படத்திற்கு திரையுலகினர் பலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கும் நிலையில் நாற்றமெடுக்கும் இப்படி ஒரு படத்தை எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்று இயக்குனர் பாரதிராஜா நேற்று காட்டமாகவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்திற்கு, இப்படத்திற்கு ஒப்புதல் தந்த தனிக்கை வாரியத்தையும் கடுமையாக தாக்கி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதோடு, இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.">இந்நிலையில், கோலி சோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இப்படம் பற்றி கருத்து தெரிவித்த போது “இப்படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது  இப்படம் ஓடக்கூடாது என நினைத்தேன். மிகவும் மதிக்கத்தக்க ஒருவரே இப்படத்தை தயாரித்திருப்பது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிவிடும் என பயமாக இருக்கிறது. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என வித்தியாசமான கதைகளோடு பல இளைஞர்கள் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது எனில் இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என நினைத்துக்கொண்டு இதுபோன்ற படங்களையே எடுக்க தொடங்குவார்கள். இது சினிமாவிற்கு நல்லதல்ல” என விஜய்மில்டன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக