புதன், 23 மே, 2018

கர்நாடகா காங்கிரஸ் எம் எல் ஏக்கள் மத்தியில் சோனியா

மாலைமலர்:  கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்களை ஒருவார காலம் ஓட்டலில் அடைத்து வைத்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். பெங்களூரு கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க.வால் சட்டசபையில் போதுமான பெருபான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீர்மானித்தது.
இதையொட்டி, சட்டசடை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பெங்களூரு நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த 8 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று பெங்களூரு நகருக்கு வந்தனர்.


பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் இடையே சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது, கடந்த ஒருவார காலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலுக்குள் சிறைப்படுத்தி அடைத்து வைத்திருந்ததை துரதிஷ்டவசமான சம்பவம் என குறிப்பிட்ட சோனியா, இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


தேர்தலில் நீங்கள் வெற்றியடைந்த பிறகும் உங்களது குடும்பத்தாரை விட்டு பிரித்து இங்கு தனியாக தங்க வைக்கப்பட்டிருந்ததற்கு காரணம் இருந்தது. வருமானவரி சோதனை என்று கூறி மிரட்டியும், வேறு ஆசைகளை காட்டியும் பா.ஜ.க. உங்களை வலையில் வீழ்த்த முயற்சித்தது. அந்த வலையில் விழுந்து விடாமல் இருந்ததற்காக நான் உங்களை பாராட்டுகிறேன்.

நீங்கள் செய்த தியாகத்தை கட்சி ஒருநாளும் மறக்காது. உரிய வேளை வரும் போது தகுந்த முறையில் நீங்கள் எல்லாம் கவுரவிக்கப்படுவீர்கள் என அவர் குறிப்பிட்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக