செவ்வாய், 1 மே, 2018

பேரா.நிர்மலாதேவி ... ஆளுநர் பன்வாரிலால் பதவியை விட்டு விலகுவதாக கடிதம் .... உள்துறை ..

Raj - Oneindia Tamil : சென்னை: மாணவிகளுக்கு செக்ஸ் வலை வீசிய நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த தமிழக ராஜ்பவன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் . அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிசன் அமைத்த பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையாம். 
கமிசனுக்கு மேலும் 2 வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழக அரசு உத்தரவிட்ட சி.பி.சி.ஐ.டி.விசாரணையில், நிர்மலாதேவி பல விசயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறாராம். அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், ஆளுநரையும், அவரது செக்ரட்டரியான கூடுதல் தலைமைச்செயலாளர்  ராஜகோபாலையும் சிக்கவைப்பதாக இருக்கிறது என்கிறார்கள். 
சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரியும் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஜெ. ஆட்சி காலத்தில் பூஜாரியும் ராஜகோபாலும் சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள். 
உள்துறை செயலாளராக ராஜகோபால் இருந்தபோது, உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ்பூஜாரி. தங்களை சிக்க வைக்கத்தான் நிர்மலா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதாக கருதியது ராஜ்பவன். 
அதனால்தான், கடுமையான நெருக்கடி கொடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பூஜாரியை கொண்டு வந்தார் ராஜகோபால். 
அந்த வகையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நிர்மலா கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அம்ரேஷ்பூஜாரி மூலம் அறிந்துதான் அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன் என்கிறார்கள். 
சிபிசிஐடி விசாரணையில் ராஜ்பவன் தொடர்பாக பொதுவான விவகாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது; இருந்தால் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தான் நேற்று முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசித்துள்ளனர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் என்கின்றன அதிகாரிகள் தரப்பு. 
இந்த நிலையில், தமிழக கவர்னர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை கவர்னரிடமிருந்து எழுதி வாங்கியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக