சனி, 19 மே, 2018

குமாரசாமி பதவியேற்பு: குவியும் தலைவர்கள்!

குமாரசாமி பதவியேற்பு: குவியும் தலைவர்கள்!
மின்னம்பலம் : கர்நாடக முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் எடியூரப்பா 56 மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்துவிட்ட நிலையில்... காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள அரசு கர்நாடகத்தில் வெகு விரைவில் அமைய இருக்கிறது.
வரும் திங்கள் கிழமை மே 21 ஆம் தேதி குமாரசாமி புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்தத் தகவலை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி செய்திருக்கிறார். இதுபற்றி இன்று ட்விட்டரில் அவர் பதிவிடுகையில், “கர்நாடகத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்த்துகளைத் தெரிவிக்க குமாரசாமியைத் தொடர்புகொண்டேன். நன்றி சொன்ன அவர், வரும் திங்கள் கிழமை பெங்களுருவில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கர்நாடகத்தின் புதிய முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான குமாரசாமி வரும் திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜகவுக்கு அரசியல் அரங்கில் கிடைத்த முக்கியமான தோல்வி இது என்பதால், குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜக அல்லாத பிராந்திய கட்சிகளின் தலைவர்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்துள்ளார் குமாரசாமி.
இதன்படி குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு,. சந்திரசேகர் ராவ் ஆகியோரோடு தமிழகத்தில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கலந்துகொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக