வியாழன், 3 மே, 2018

மோடி : கர்நாடக பெண்ணை பாதுகாப்பு அமைச்சராக்கி உள்ளேன் ! கர்நாடகா தலையில் தமிழ்நாட்டு நிர்மலா ...

மோடி தனது குஜராத் உள்வட்டத்தில் இருந்த நிர்மலாவை கர்நாடகா பாஜக எம் எல் ஏக்களை கொண்டு  ராஜ்யசபாவுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு அமைச்சராகவும் வைத்துள்ளார் . இதனால் கர்நாடகா பாஜக  ஏற்கனவே புழுங்கி தவிக்கையில் அவரை வேறு கர்நாடகாவை சேர்ந்தவர் என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி உள்ளார்
Shyamsundar - Oneindia T பெங்களூர்: கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார். 
நிர்மலா சீதாராமனை கன்னட பெண் என்று கூறியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல்   நடக்க உள்ளது.
Kannadigas trolling PM Modi as he said that Nirmala Seetharaman a Kannadiga in campaign இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடகாவில் பல்லாரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார்.
அதில் பேசிய அவர் பாஜக எப்போதும் பெண்களுக்கு மதிப்பளிக்கும், ஆட்சியில் கூட பெண் ஒருவர்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறினார். அதோடு, ''கர்நாடக பெண்ணை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் நிர்மலா சீதாராமன். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த வெங்கையா நாயுடுதான் துணை குடியரசுத்தலைவர்'' என்றுள்ளார். தற்போது கன்னடர்கள் மோடியின் இந்த பேச்சை வைத்து கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழ் பெண்ணை கன்னடர் என்றதால் கன்னடர்கள் டிவிட்டரில் கொந்தளித்து போய் உள்ளனர். எப்படி ஒரு தமிழ்ப்பெண்ணை கன்னடர் என்று கூறலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக