ஞாயிறு, 27 மே, 2018

காடுவெட்டி குருவும் ..ஆர்.வெங்கட்ராமனும் ... பார்ப்பானுக்கு ஒரு நீதி வன்னியருக்கு ஒரு நீதி ..

LR Jagadheesan : நேற்றெல்லாம் ஜாதி ஒழிப்புப்போராளிகளாக களமாடிய ாவை ஆட்சிக்கு கொண்டுவரும் ஒரே நோக்கத்தோடு ஒன்றுக்கு இரண்டுமுறை தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்தவர் ஆர் வெங்கட்ராமன் என்னும் அதி உத்தமர். அந்த இரு ஆட்சிக்கலைப்புகள் தமிழக அரசியலில் ஏற்படுத்திய மடை மாற்றத்தை உங்களில் எத்தனைபேர் உணர்ந்தீர்கள்? எத்தனைமுறை அதை விவாதப்பொருள் ஆக்கினீர்கள்? அந்த அநியாயத்தை அடுத்த தலைமுறைக்கு அறியவைக்க நீங்கள் இதுவரை ஆற்றிய ஆனப்பெரிய பங்களிப்பென்ன? அதை எதையும் செய்தாமல் காடுவெட்டி குருவின் மரணத்தை சாக்காக வைத்து அவரை வசைமாரி பொய்வதும் ஒட்டுமொத்த வன்னியர்களையும் ஜாதிவெறியர்கள் என்று ஓலமிடுவதுமாக நேற்றைய பொழுதை கழித்தீர்கள். நல்லது. அதிதீவிர வன்னியரான காடுவெட்டி குருவை அவரது வன்னிய சொந்தங்களே தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள். எல்லா வன்னியர்களும் அவர் பின் போகவும் இல்லை. அவரை ஆதரிக்கவும் இல்லை. கடுமையாக எதிர்த்தார்கள். 
ஆனால் ஆர்வியை அக்ரஹாரவாசிகள் எத்தனை பேர் எதிர்த்தார்கள்? அரசியலில் அவருக்கு எதிர்கட்சிகளில் இருந்தவர்கள் கூட அவரை என்றும் பெரிதாக எதிர்க்கவில்லையே ஏன்? 


சிலருக்கு ஜாதிச்சங்கமோ வீர வசனங்களோ மேடைகளோ எதுவுமே தேவையில்லை. கடல்கடந்தும் பூமியின் எந்த பக்கம் இருந்தாலும் அவர்கள் ஒட்டுமொத்த வாழ்விலும் ஜாதிகளாகவே வாழ்கிறார்கள். ஜாதிக்காகவே வாழ்கிறார்கள். ஜாதிக்குள்ளேயே உழல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் தூத்துக்குடியில் படுகொலைகளை நியாயப்படுத்துகிறார்கள். இன்னும் பலர் கொல்லப்படவேண்டும் என பகிரங்கமாக பட்டியல் போடுகிறார்கள். கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அனுமதி மறுக்கிறார்கள். மற்றவர்களுக்கோ எத்தனை ஜாதிச்சங்கங்கள் அமைத்தாலும் வீரவசனங்கள் பேசினாலும் அவர்களின் ஜாதிக்காரர்களே அவர்களை அதே அளவுக்கு தீவிரமாக எதிர்த்து தோற்கடிக்கிறார்கள். 

எனவே சுயஜாதிப்பற்றும் ஜாதிவெறியும் நீங்கள் நினைப்பதைப்போல் உருவகிப்பதைப்போல் உணர்வதைப்போல் கட்டமைப்பதைப்போல் அவ்வளவு எளிய விஷமல்ல; விஷயமும் அல்ல. நம் அனைவரின் சிந்தனையில் ஈராயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்ட விஷம். நாம் எல்லோரும் எல்லா நேரமும் அதை சுமந்தே திரிகிறோம் என்கிற அடிப்படை புரிதல் இருந்தால் சந்தையூரில் சுவர்கள் எழும்பாது. காடுவெட்டி குருக்கள் தோன்றியிருக்கமாட்டார்கள். ஆர்விக்களின் தலைக்குமேலே வீசும் புனிதஒளிவட்டம் என்றோ மறைந்திருக்கும். ஜாதி அரசியலின் தோற்றுவாயும் பாதுகாப்பு அரணும் காடுவெட்டி குருக்களல்ல; ஆர் வெங்கட்ராமன்கள் என்கிற அடிப்படையை உணராதவரை ஜாதி அரசியலும் ஒழியாது; அதை ஒழிப்பதற்கான செயற்பாடுகளும் எதிர்பார்க்கும் பலனைத்தராது
பெரியாரிய, அம்பேட்காரிய மற்றுமுள்ள முற்போக்கு போராளிகளுக்கு இந்த இருவரின் ஜாதிச்சங்க அரசியலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஏழுகோடி தமிழருக்கும் அதிகபட்ச சேதத்தை பலதலைமுறைகளுக்கும் நீடிக்கவல்ல பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என்று ஒரே ஒருகணம் சிந்தித்திருக்கிறீர்களா? நூறுகோடி இந்தியர்களின் முதற்குடிமகன், இந்திய ஜனாதிபதி என்கிற அதி உயர் பதவியில் இருந்துகொண்டு வெறும் ஜாதிச்சங்கத்தலைவராக செயற்பட்டு தன் ஜாதிப்பெண்மணியான ஜெயலலித

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக