சனி, 5 மே, 2018

நீட் தேர்வு ... கூறப்படும் காரணங்கள் எதுவுமே சரியானது அல்ல

Annamalai Arulmozhi : இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலத்தில் இருந்து
ஒரே ஒரு மாணவர் கூட
எதற்காக வேறு மாநிலத்திற்குச்
சென்று தேர்வு எழுத வேண்டும் ??
என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா
பிஜேபி அரசிடம் ??

மாணவர்கள் அவரவர் மாநிலத்தின் மூன்று மையங்களில் தான் விருப்பம் தெரிவிப்பார்கள்.
அதைத்தாண்டி வேறு மாநில மையங்களை மாணவர்கள் எப்படி விருப்பப்பட்டு கேட்பார்கள்..?
ஒன்று தமிழ்நாட்டில் அனைத்து மையங்களும் நிறைந்து விட்டது என்று விண்ணப்பம் பதிவுசெய்யும் போது அறிவிக்கப்படும். அப்படிச் செய்திருந்தால் அதுவும் மோசடியே. மையம் என்பது சென்னை மதுரை திருச்சி கோவை என்ற நகரங்களையே குறிக்கும். அந்த நகரங்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு எழுதும் அறைகள் அதிகரிக்கப்படும். (அதிகரிக்கப்பட வேண்டும்.)

விண்ணப்பத்தை இணையத்தில் பதிவுசெய்யும் போதே நீ கேட்ட மையம் நிறைந்து விட்டது.. அடுத்த ஊரைத் தேர்வு செய்யவும் என்று பதில் கொடுப்பதே மோசடி அல்லது அறிவீனம் தான் .
இப்படியாக வெளி மாநிலங்களை மாணவர்கள் தேர்வு செய்திருந்தால்
அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட நேர்வு.
இதைத்தவிர யாராவது மாணவர்கள் குறிப்பிட்ட சில மாநில மையங்களை மாணவர்கள் தாங்களே விரும்பி தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அது அவர்கள் பயிற்சி பெற்ற மையமாக இருக்கலாம். அல்லது அந்த மையத்தில் தேர்வு எழுதினால் தேர்ச்சி உறுதி என்ற கருத்து பரவியிருக்கலாம்.
எதுவுமே சரியான காரணம் அல்ல
என்பதை நாம் அறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக