ஞாயிறு, 6 மே, 2018

நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்?

IMG_2860_13096 நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? IMG 2860 13096IMG_2846_13337 நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? IMG 2846 13337விகடன்: நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடமும் ’நீட்’ தேர்வு பயத்தினால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி சிவசங்கரி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. தகவலின் உண்மை நிலையை அறிய முடிவெடுத்தோம். அதில் குறிப்பிட்டுள்ள மாணவியின் வீடு ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் வருவதால் அதன் உதவி ஆய்வாளர் வீரபுத்திரனைத் தொடர்பு கொண்டு வழக்கின் விபரங்களைக் கேட்டோம். அதற்கு, “அப்படியெல்லாம் இல்லை சார். அந்தப் பொண்ணு செத்துப்போயி ஒரு வாரம் ஆகுது.
அந்தப் பொண்ணுக்கு இரத்த அழுத்த நோய் இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். தேவையில்லாமல் இதை இப்போது பெரிது படுத்துகிறார்கள்” என்றார். IMG_2846_13337 நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? IMG 2846 13337 அரும்பார்த்தபுரம், பாரதிதாசன் வீதியில் உள்ள மாணவி சிவசங்கரியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுவதும் சோகம் அப்பிக் கிடந்தது. மாணவி சிவசங்கரியின் அப்பா சிவசங்கரனிடம் பேசினோம்.

“என் பெரிய பொண்ணு நல்லா படிக்கிறவ சார். ஆதித்யா வித்யாஸ்ரமம் ஸ்கூல்லதான் படிக்க வைச்சேன். கடந்த 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவளும் அவ தங்கச்சியும் வீட்டில்தான் இருந்தார்கள். சிவசங்கரி நீட் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள். நானும் என் மனைவியும் எங்களுக்குச் சொந்தமான கடையில் இருந்தோம். அன்று மதியம், ‘அக்கா ரூமுக்கு போயி ரொம்ப நேரமாகியும் கதவைத் திறக்கலைப்பா’னு என் சின்ன பொண்ணு எங்களுக்குப் போன் செய்தாள். +2 தேர்வின்போது இரவு, பகல் என நேரம் பார்க்காமல் படித்ததால் அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு ஒருமுறை மயக்கமடைந்தாள். அதேபோல நடந்து புள்ளை விழுந்துடுச்சோனு நினைத்து வீட்டுக்குப் போயி கதவை உடைத்துப் பார்த்தால் அங்கே என் பொண்ணு தூக்குப் போட்டுகிட்டு..” பேச முடியாமல் அழுதவரை நாம் சமாதானப்படுத்த அவரே தொடர்ந்தார்.

“ஆனால் விசாரணை என்ற பெயரில் அருவருக்கத்தக்க கேள்விகளைக் கேட்டு இதயத்தைக் குத்திக் கிழிச்சாங்க. போலீஸ் வேலைக்கு வந்தால் மனசாட்சியை கழற்றி வைத்து விடுவார்களா சார் ? அவர்களுக்கெல்லாம் பெண் பிள்ளைகள் இருக்காதா ? விடுங்க சார்.. என் பொண்ணே போயிட்டா இனி யாரைச் சொல்லி என்ன ஆகப்போகுது” என்றார் விரக்தியாக. “சின்ன வயசுல இருந்தே என் பொண்ணுக்கு மகப்பேறு டாக்டராகனும்னுதான் ஆசை. பத்து வயசுல இருந்தே மருத்துவம் சம்மந்தமா புத்தகங்கள்ல வர செய்திகளை கட் பண்ணி வைப்பா. 10-வது வரைக்கும் சி.பி.எஸ்.இல தான் படிக்க வைச்சோம்.
10-வது பொதுத் தேர்வுல அவ மதிப்பெண் 9.6. டாக்டராக +2 மார்க்தான் முக்கியம்ங்றதால +1, +2-வை அதே பள்ளியிலேயே மாநிலப் பாடத்திட்டத்திற்கு மாற்றினோம். +2 தேர்வு முடிந்த பிறகு நீட் வகுப்பில் சேர்ந்து படித்தாள்.
நீட் வகுப்பில் அவளுடன் படித்தவர்களுக்கெல்லம் ஒரு இடத்திலும், இவளுக்கு மட்டும் காலாப்பாட்டிலும் தேர்வு மையம் கிடைத்தது. அதில் பயந்துபோயி ‘அம்மா நீட் தேர்வுல பாஸ் பண்ணலைன்னா என்னம்மா பன்றது? டிரஸ்லாம் கூட நிறைய கட்டுப்பாடாமே’னு அழுதா. பராவாயில்லைம்மா, அது மட்டும்தான் படிப்பா ? விலங்கியல், சித்தா அப்படினு நிறைய இருக்குனு சொன்னேன்.

அதுக்கு ‘இல்லை நான் எம்.பி.பி.எஸ்தான் படிப்பேன். இல்லைன்னா செத்துப் போயிடுவேன்னு’ சொன்னாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினோம். அதற்குள் இப்படி எங்களை பழிவாங்கிட்டுப் போயிட்டா. அப்போவே போலீஸ்ல இத சொல்லியிருப்போம். ஆனால் போலீஸ் கொஞ்சம் கூட ஈவு, இரக்கமே இல்லாம….” உடைந்து அழ ஆரம்பித்தார்.
பின்பு, “ரத்த அழுத்தத்துக்காக எல்லாம் எங்க பொண்ணு சாகலை சார். அதுக்காக தற்கொலை பண்ணிக்கப் போறவ எப்படி சார் மூன்று கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்கு முன் பணம் கட்டச் சொல்லியிருப்பாள் ?
நீட் தேர்வு பயத்துலதான் தற்கொலை பண்ணிக்கிட்டா. ஆனால் எங்களையே மன ரீதியா சிதைத்தது போலீஸ். குறைந்த ரத்த அழுத்தத்தாலதான் உங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டானு எழுதிக்கறோம். நீங்களும் அப்படியே எல்லார்கிட்டயும் சொல்லிடுங்கனுதான்
போலீஸ் எழுதிக்கிட்டுப் போனாங்க. நீட்டுக்காக கடைசியாக உயிரிழந்தது என் பொண்ணாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று அழுகிறார் மாணவி சிவசங்கரியின் தாய் சுசிலா.

இதுகுறித்துக் கேட்க வழக்கின் விசாரணை அதிகாரியான வீரபுத்திரனை மீண்டும் தொடர்பு கொண்டோம். “அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் எழுதிக் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்தோம். அதை மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது ?
பெண் எதற்காக இறந்தாள் என்பதைப் பெற்றவர்களிடம்தானே கேட்க முடியும்?
 அந்த விசாரணையைத்தான் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார். ஆனால் ”நீட் தேர்வு பயத்தில்தான் புதுச்சேரி மாணவி சிவசங்கரி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் போலீஸ் அதனை திசை திருப்ப முயற்சி செய்கிறது” என்று பல்வேறு சமூக அமைப்புகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக