சாதி இந்து வெறியர்களால் தாழ்த்தப்பட்ட தேவேந்திர சமுக மக்கள் கொலைவெறி தாக்குதல்களில் இருவர் உயிரழிப்பு 5 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்தவுடன் மதுரை நோக்கி விரைந்தேன். அண்ணாநிலையம் அருகே சில அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த படுகொலை சம்பவத்தை விசாரிக்க சிபிசிஐடி விசாரனை வேண்டும் என்ற ஒரே கோரிக்கையோடு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொன்டு இருந்தனர். நானும் போராட்டத்தோடு கலந்து கொன்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பங்கெடுத்த அமைப்புகளின் கருத்துக்களின் படியும் ஒரு கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்தோம். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் மதுரையில் போராட்டத்தில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ நேரில் இன்னும் பார்வையிடவில்லை ஆகையால் அவர்களுக்கு தகவலை நடைபெறும் போராட்டத்தை பகிர வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தகலை சொன்னோம். அவரின் தகவல் பரிமாற்றம் மூலமாக சிவகங்கை மாவட்ட டிஆர்ஓ நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கை மனுவை பெற்றுக் கொன்டார்.
கோரிக்கை மனு விபரம்:-
கச்சநத்தம் கிராமம் போன்று கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆலடிநத்தம்,மாரநாடு, திருப்பாசேத்தி, ஆவரங்காடு பகுதிகளில் காவல்துறை துணையோடு சாதிவெறி தாழ்தத்தப்பட்ட மக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது உச்சகட்டமாக நடந்த கொலைவெறி தாக்குதலில் இருவர் படுகொலையும் 5 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ தகுதியற்ற வன்கொடுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியை தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் நேரடி கண்காணிப்பின் கீழ் கொன்டு வரவேண்டும்.
கச்சநத்தம் பகுதியில் நடைபெறும் தொடர் தாக்குதல்களுக்கும் தற்போது நடைபெற்றுள்ள கொலைவெறி தாக்குதல்களால் நிகழ்ந்த படுீகாலைகளுக்கும் துணையாக இருந்த பழையனூர், திருப்பாசேத்தி காவல்நிலையங்களின் உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். மேலும் இவ்வழக்கை உள்ளுர் காவல்நிலையமோ அல்லது மாவட்ட காவல்துறையோ விசாரித்தால் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும் என்பதால் இவ்வழக்கை 32/18 தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் . மேலும் இவ்வழக்கில் நீதியை நிலைநாட்ட வழக்கினை முற்றிலுமாக சிவங்கை மாவட்டம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் நடத்திடவும் உத்தரவிட வேண்டும்.
கச்சநத்தம் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரனை முடியும வரை குற்றவாளிகளுக்கு பினை வழங்காமலேயே சிறையிலேயே வைக்க வேண்டும்.
திருப்பாசேத்தி, பழையனூர் வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமை தாக்குதல்களை முறையாக தடுக்காததன் விளைவே கொலைவெறி தாக்குதல்களால் இருவர் படுகொலைக்கு காரனமாகும். எனவே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களை தேசிய எஸ்சி/எஸ்டி ஆணைய விசாரனைக்கு உட்படுத்த வேண்டும்.
கச்சநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் , சன்முகநாதன் ஆகிய இருவர் குடும்பத்திற்கும் இழப்பீடாக ரூபாய் 25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் வங்கிட வேண்டும் .
கச்சநத்தம் கிராம மக்கள் தொடர் சாதிவெறி சக்திகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் இனி வாழ முடியாத மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே மாவட்டத்தின் பிற பகுதியில் ஒரு பாதுகாப்பான இடம் தேர்வு செய்து தலா 5 சென்ட் வீதம் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக் கூடியதை நிறைவேற்றி மற்றவைகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கச்சநத்தம் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தை சரியாக முன்னெடுக்க மக்கள் விடுதலை கட்சி முருகவேல்ராஜன், மூவேந்தவர் புலிப்படை பாஸ்கர், தேவேந்திர சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு சிவமணி உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்போடு நானும் இணைந்து முன்னெடுக்கிறோம். எஸ்சி/எஸ்டி பிரிவில் வழக்கு பதிவிட கூடாது என்று புதியதமிழகம் கட்சியினர் கூறியதை மக்களும் போராட்ட குழும் ஏற்க மறுத்ததால் புதியதமிழகம் கட்சியின் போராட்டத்தில் இருந்து கிளம்பி விட்டனர். மேலும் இப்படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து தியாகி இம்மானுவேல் பேரவை, சிபிஐஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக, தமிழ்புலிகள் இயக்க தோழர்களும், எழுத்தாளர் தோழர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் நேரில் வந்து கலந்து கொன்டனர். இயக்குனர் மாரிசெல்வராஜ், வழக்கறிஞர் பிரபு ஜீவன், தமிழக விடுதலைப்புலி இயக்க பொதுச் செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர்கள் தொலைபேசி வாயிலாக தகவலை கேட்டறிந்து கொன்டனர்.
காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது...
மூவேந்தவர் புலிப்படை அல்ல
பதிலளிநீக்குமூவேந்தர் புலிப்படை