வெள்ளி, 18 மே, 2018

குஷ்பூ : நடிகை என்பதால் விமர்சிப்பதா' திருநாவுக்கரசருக்கு பதிலடி

தினமலர் :சென்னை, ''நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா,'' என
காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் வசை மாரி பொழிந்து கொள்கின்றனர்.தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப் போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, ''நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை ,செருப்பு வீசி,விரட்டி அடித்தனர். அங்கு சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்த தாலேயே இதெல்லாம் நடந்தது காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார்.
இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும். அவர் சினிமாவில் நடிக்கட்டும், அரசியலில் நடிக்கத் தேவையில்லை,'' என திருநாவுக்கரசர் சாடி இருந்தார்.இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி: நான், தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான் வெளிப்படையாகதெரிவித்தேன்.

அரசியலில், ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படும் சிலரில் நானும் ஒருத்தி. டில்லியில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து தான், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என தெரிவித்தேன்.
</>அது நடக்கப் போவதில்லை என்றால், தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ் தில் இருக்கும் ஒருவர், நாகரிகமாக பேசலாம். அதை விடுத்து, என்னை நடிகை என்பதால், தாறுமாறாக விமர்சிப்பது தவறு.


திருநாவுக்கரசர் ஒரு கட்சிமாறி அவரும், பல கட்சிகளுக்கும் சென்று வந்தவர் தான் என்பதை மறந்து விட்டு, நடக்காத வைகளையெல்லாம், இட்டுகட்டிப் பேசுகிறார். தி.மு.க.,வில் நடந்த சம்பவம் குறித்தெல்லாம், அவர் ஏன் இப்போதுபேச வேண்டும். அவருடைய கடந்த காலங்களை பற்றி நான் பேசவில்லையே.

எந்தக் கட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சி நலனுக்கு உகந்த வகையிலும், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த காலங்களில் எந்தளவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதற்காக நான் பட்ட கஷ்டங்கள்; உழைப்பையெல்லாம் துச்சமாக மதித்து, விமர்சனம் செய்யும் தலைவருக்கு, சரிக்கு சமமாக லாவணி பாட விரும்பவில்லை.

நான் சொன்ன கருத்துக்கள், தனிப்பட்ட விமர்சனங் கள் அல்ல. கட்சியின் நலனில் அலட்சியம் காட்டப் படுவது குறித்தும், செயல்பாடுகளில் இருக்கும் குறை பாடுகள் குறித்தும் தான் பேசினேன்.மற்றபடி, அவரது விமர்சனங்கள் குறித்து, தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்படும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் பார்த்துகொள்ளட்டும். அவரது பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி, சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.


தி.மு.க., திடீர் ஆதரவு

திருநாவுக்கரசர் பேச்சை மறுத்தும், குஷ்புக்கு ஆதரவாகவும், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., -டி.கே.எஸ். இளங்கோவன், நேற்று வெளியிட்ட அறிக்கை: முட்டை, செருப்பால் அடித்து, தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு என, திருநாவுக்கரசர் பேசியதாக, செய்தி வெளியாகியுள்ளது.

தி.மு.க.,வில் இருந்த காலத்தில், குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப் பட்டார். தி.மு.க.,வினர் யாரும், குஷ்புக்கு எதிராக, இதுபோன்று, தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை; தாக்கவுமில்லை. அந்தச் செய்தியில், சிறிதும் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


லண்டனில் குஷ்பு!

திருநாவுக்கரசர் அவதுாறாக விமர்சித்துள்ளதால், குஷ்பு ஆதரவாளர்கள் கொந்தளித்து உள்ளனர். திருநாவுக்கரசருக்கு எதிராக, கொடும்பாவி எரிக்க, அவர்கள் திட்டமிட்டு ள்ளனர்.

இது குறித்து, குஷ்பு தரப்பில் விசாரித்த போது, அவர், லண்டனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு வார பயணத்தை முடித்து, அவர் சென்னை திரும்பியதும், காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து, திருநாவுக்கரசர் மீது புகார் செய்வார். அதன்பின், தமிழகத்தில், திருநாவுக் கர சருக்கு எதிரான போராட்டத்தில், குஷ்பு தீவிரமாக இறங்குவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக