ஞாயிறு, 13 மே, 2018

கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்... என்ன காரணம்?

No automatic alt text available.Swathi K : கர்நாடகா தேர்தல் முடிவு என்னோட கணிப்பு!!! - சுவாதி
நான் ஏப்ரல் 24ல் பதிவிட்ட அதே எண்கள் தான்.
மொத்த இடங்கள்: 224
தேர்தல் நடைபெற்றது: 222
காங்கிரஸ் - 115-125 (40-43% vote share)
பிஜேபி - 70-78 (31-35%)
ஜனதா தளம் - 22-28 (15-18%)
மற்றவர்கள் - 2-5 (5-8%)
காங்கிரஸ் வெற்றிக்கு சில முக்கிய காரணங்கள்:
1. சித்தராமையா ஆட்சி.. பெரிய அளவுக்கு அவரின் மேல் எதிர்ப்பு அலை இல்லை.. ஆளும் கட்சி மேல் எதிர்ப்பு அலை இல்லாமல் வீழ்த்துவது கடினம்.
2. ஊழல் எடியூரப்பா - பெரிய அளவுக்கு மக்களுக்கு இவரின் மேல் ஈர்ப்பு இல்லை. அது போக இதற்க்கு முன்பு அவரின் ஆட்சி ஊழல் ஆட்சி என்பது மக்கள் மனதில் தெளிவாக பதிந்தது.
3. ரெட்டி சகோதரர்கள் - கர்நாடகம் முழுவதும் இவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது.. பிஜேபி செய்த மிகப்பெரும் தவறு இது தான்.. ரெட்டி குடும்பத்திற்கு 8 சீட் கொடுத்தது.. இது நடுநிலைமையில் யோசிக்கும் மக்கள் அனைவரையும் பிஜேபியின் மேல் வெறுப்பு வர வைத்தது..

4. காங்கிரஸ் சோசியல் மீடியா பிரச்சாரம் - I felt congress improved a lot in the past one year in Social media interaction with people. சித்தராமையா சாதனைகள், பிஜேபியின் தவறுகள், மோடியின் பொய்கள் அனைத்தையும் உடனுக்குடன் பகிர்ந்தது.. சித்தராமையா ட்விட்டர்.. இப்படி social media'வில் congress dominated BJP.
5. 80% சிறுபான்மை இனத்தவர் ஓட்டுக்கள் அப்படியே காங்கிரஸ்க்கு விழ வாய்ப்பு.
6. மோடியின் மத்திய அரசு மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு..
7. மோடியின் பொய்யான தேர்தல் பிரச்சாரம் குஜராத்தில் எடுபடலாம்.. அது கர்நாடகாவில் அவருக்கு backfire ஆகவே வாய்ப்பு அதிகம்..
8. மைசூரை சுற்றியுள்ள 64 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி மூன்றாம் or நான்காம் இடங்களை பிடிக்கும் சூழல்.. அங்கெல்லாம் பிஜேபி இன்னும் வளரவில்லை.. அந்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் vs ஜனதா தளம் தான்.
9. 224 தொகுதிகளில் கிட்டத்தட்ட 175 இடங்களில் காங்கிரஸ் vs பிஜேபி, 50 இடங்களில் காங்கிரஸ் vs ஜனதா தளம்.. தேர்தலுக்கு முன்னமே பிஜேபி வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்த தொகுதிகள் 50க்கும் மேல் இருக்கும். காங்கிரஸ்க்கு அந்த மாதிரி 10 தொகுதிகள் தான் இருக்கும்..
10. ஆந்திராவை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட 40 இடங்களிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.. அங்கு தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதி.. இவர்களின் முழு சப்போர்ட் காங்கிரஸ்க்கு.
11. குஜராத் தேர்தல் எக்ஸிட் போல் எல்லா மீடியாவும் பிஜேபிக்கு 115+ காங்கிரஸ்'க்கு 65+ இடங்கள் கிடைக்கும் என்று சொன்னது.. கடைசியில் பிஜேபிக்கு கிடைத்தது 99.. காஙகி்ரஸ்க்கு 78.. India Today கணிப்பு ஓரளவுக்கு ஒத்து வந்தது குஜராத்தில் (They predicted 99-113 for BJP.. 68-82 for Congress).. கர்நாடக தேர்தலில் அவர்களின் exit poll கணிப்பு (106-118 for Congress, 79-92 for BJP)..கிட்டத்தட்ட இதை ஒட்டியோ அல்லது இதைவிட 10 சீட் அதிகமோ காங்கிரஸ்க்கு கிடைக்கும்.
EVM மூலமாக தொகுதியின் தேர்தல் முடிவை நேரடியாக மாற்ற முடியாது.. ஆனால் ஒவ்வொரு பூத்திலும் பதிவான ஓட்டை மெஷின் எண்ணும் போது காங்கிரஸ்க்கு விழுந்த ஓட்டின் எண்ணிக்கையில் இருந்து சில சதவிகிதம் (may be 2-5%.. எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியாது) பிஜேபியின் எண்ணிக்கையில் காட்ட முடியும் software program மூலம்.. இது கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது என் கணிப்பு.. இங்கும் அந்த கோல்மால் நடந்து இருக்கும்.. ஆனால் அதையெல்லாம் தாண்டி சித்தராமையா வெற்றி பெறுவது உறுதி என்றே தெரிகிறது.. செவ்வாய் காலை 9 மணிக்கு நிலவரம் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
- Swathi K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக