வெள்ளி, 4 மே, 2018

நீட் பயிற்சி மையங்கள்... கோழிப் பண்ணைகள் ஒரு நீட் பயிற்சி மையத்தோடு கூட்டணி அமைத்தார்கள்.

Shankar A : சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுபவர்களுக்குத் தெரியும். நேர்முகத்
Click to see bigger
தேர்வுக்கு சிறந்த பயிற்சி நிலையம் டெல்லியில் வாஜிராம் என்று சொல்லுவார்கள்.
சில மாதங்கள் முன்பு வரை, க்ரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு சிறந்த நிலையம், அப்போல்லோ மையம் என்பது தேர்வாளர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த நிலையம், சைதை துரைசாமியின் பினாமி நிறுவனம்.
தற்போது, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 39 மட்டுமே. இவர்கள் அனைவரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்.
தனியார் பள்ளி மாணவர்களின் கதையே வேறு. அவர்களில் ஒருவர் பாக்கியில்லாமல், அத்தனை பேரும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் வரை, நாமக்கல்லில், கோழிப் பண்ணைகள் போல பள்ளி நடத்தி வந்தவர்கள், ப்ளஸ் ஒன் பாடத்தையே கற்றுக் கொடுக்காமல், இரண்டு வருடங்கள், ப்ளஸ் டூ பாடத்தை விடாமல் நடத்தி, மாணவர்களை 1150க்கு மேல் மதிப்பெண் பெற வைத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அத்தனை இடங்களையும் ஆக்ரமிப்பார்கள்.
நீட் தேர்வு இந்தக் கோழிப் பண்ணைகளுக்கு பெரிய ஆப்பு வைத்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தவர்கள், இழந்த தங்கள் வருமானத்தை அத்தனை எளிதில் தியாகம் செய்து விடுவார்களா என்ன ?
இவர்களுக்கு வாராது வந்த மாமணிதான், நீட் பயிற்சி மையங்கள். இந்த தனியார் கோழிப் பண்ணைகள், அத்தனையும், ஒரு நீட் பயிற்சி மையத்தோடு கூட்டணி அமைத்தார்கள். இதிலும் சில கில்லாடி கோழிப் பண்ணை உரிமையாளர்கள், தாங்களே நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார்கள்.

பெற்றோர்களிடம் இவர்கள் சொல்லும் அறிவுரை, எங்கள் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றால், நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலோ, அரசு மருத்துவக் கல்லூரியிலோ, இடம் கிடைக்கும் என்று அறிவுரை வழங்குவார்கள். இந்த நீட் பயிற்சி மையங்களின் கட்டணம், 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை.
இப்படி தனியார் நீட் மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள்தான், இன்று வெளி மாநிலங்களில் தேர்வெழுதச் செல்கிறார்கள்.
39 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், வெளி மாநில மையங்கள் ஒதுக்கப்பட்டதன் காரணம், அவர்கள் தாமதமாக விண்ணப்பித்ததே என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, பயிற்சி மையத்தினர் அளித்த அறிவுரை, முதல் பத்தியில் சொன்னது போல, வெளி மாநில மையங்களில் எழுதினால், மருத்துவ சீட் கிடைப்பது உறுதி என்பதே. அது எப்படி சாத்தியம். அந்த மாநிலத்தில் யாருமே மருத்துவ தேர்வு எழுத மாட்டார்களா என்று எந்த பெற்றோரும் கேள்வி எழுப்புவதில்லை.
அப்படி கொழுப்பெடுத்துப் போய், வெளி மாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு, எதற்காக அரசு ஒவ்வொருவருக்கும், மக்கள் வரிப் பணத்தில் 1000 ரூபாய் எதற்காக வழங்க வேண்டும் என்பதுதான் இப்போது எழும் கேள்வி.
இப்படி வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் தனியாகவா செல்லப் போகிறார்கள் ? அவர்கள் பெற்றோர் உடன் செல்வார்களா மாட்டார்களா ? தனியார் நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பிள்ளைகளை பயிற்சி எடுக்க வைக்கும் பெற்றோர்கள் செலவு செய்யட்டுமே. நாம் எதற்காக கவலைப்பட வேண்டும்.
நமது கவலை, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் குறித்தே. அந்த 39 மாணவர்களுக்கான உதவிகளை, மாவட்ட ஆட்சியர்கள் முழுமையாக செய்து வருகிறார்கள்.

People who write civil service exams will know. The Best Training Station for interview will say with ram in Delhi.

Until a few months, the best station for the group 1 interview is to know all the choices. That Station, Caitai Durai's proxy company.

Now, the number of students who are going to go to foreign states from Tamil Nadu is 39 only. All these people, government and government help school students.

The story of private school students is different. One of them has been trained in private neet training centres.

Until the neet exam is introduced, those who took school in namakkal, like poultry farm, do not teach the plus one song, two years, plus don't have to sing, the students are more than 1150 In order to get all the places of government medical colleges.

Neet exam made a big app for these poultry farms. People who have earned millions of rupees and have lost their income will easily sacrifice their income?

It will not come to them, the neet training centers. These private chicken farms are set up with a neet training center. And some of the growers chicken farm owners, they started the neet training center.

Advice to the parents, if we get neet training in our training center, we will give advice to the aids medical college and government medical college. The cost of these neet training centres, from 1 LAKH TO 2 LAKHS.

This is the students who trained in private neet centers, today they are selected in foreign states.

The reason for 39 government school students and outside state centers are the reason for the education department. The Pre-applied students have been assigned to the center in tamilnadu.

The advice of the training center for students who trained in private neet training centres, as the first said, if it is written in external state centres, it is sure to get medical seat. How is it possible. In that state, no one will have a medical choice, and no one will be questioned.

It is a question that the government has to give 1000 rupees to every person who is going to be elected for the state of the state.

Is students going to go alone in such states? Will they go with parents? Let's spend the parents who are giving money and training children in private neet training centres. We need to worry why.

Our worry is about students studying in government schools. For those 39 students, the district collector is doing complete.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக