செவ்வாய், 22 மே, 2018

கர்நாடகம்: ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு

8 empty boxes used for carrying VVPAT machines found in shed in Vijayapura tamil.oneindia.com/authors/lakshmi-priya :
பெங்களூர்: கர்நாடகத்தில் விஜயபுராவில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் (விவபேட்) அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 12-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் விஜயபுரா மாவட்டத்தில் ஒரு தற்காலிக ஷெட் அருகே ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் காலி அட்டை பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இவை வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரி பார்ப்பதற்காக வழங்கப்படுவதாகும். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில் ஒரு மாவட்டத்துக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ தொடர்பில்லாத மணகுலி கிராமத்தில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன என்றார்.
இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எடியூரப்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக