சனி, 26 மே, 2018

நாடார்களும் பாஜகவும் .. பார்ப்பனர்களும் பாஜகவும் ...

Bilal Aliyar : தமிழக பாஜகவின் ஒரே எம்பி நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழக பாஜகவின் மாநில தலைவர் நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழக பாஜகவில் வலிமையான பொறுப்பில் இருப்பவர்கள் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள்
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில், முன்னிலை ப்படுத்துவதில் தங்கள் பொருள், பண உதவிகளை அதிகமாக வழங்கி வருபவர்கள் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள்.
நிற்க
அரசியல் ரீதியாக தங்களுக்கு, தங்களின் இருப்புக்கு உதவி செய்யும் ஒரு சமூகத்தையே, அவர்கள் வலிமையாக உள்ள புவிபரப்பில் வெளிப்படையாக துப்பாக்கி சூடு, அடிதடி நடத்தி, வீட்டிற்குள் புகுந்து தாக்குவதை பாஜக ஆதரிக்கிறது என்று சொன்னால், கண்ணை மூடிக். கொண்டு மோடியை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என சொல்பவர்களை பார்த்து காறி உமிழ தோன்றுகிறது.
பாஜகவின் அரசியல் என்பது சிறுபான்மை எதிர்ப்பு என்பதில் கூட சந்தேகம் வரலாம், ஆனால் இந்துக்களின் சிறுபான்மை இனமான அந்த 3% சதவீத பிராமணர்களின் ஆதரவு என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை....

கலவரம் நடத்த, கொடு பிடிக்க, லோக்கல் மேடைகளில் கத்துவதற்கு மட்டுமே சூத்திர நாடார், வன்னியர், கவுண்டர், தேவர் என்ற அனைத்து இடைநிலை சாதி சமூகங்களை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களை நிர்மூலமாக்க யோசிக்கவே மாட்டார்கள்.
சாமானியனின் அரசியல் என்பது யாரை எதிர்க்க வேண்டும் என்பதை விட யாரை ஆதரிக்கவே கூடாது என்பதில் அடங்கி இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக