செவ்வாய், 1 மே, 2018

டெல்லியில் .திருமாவளவன் ராகுல் காந்தி , சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சந்திப்பு ...

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தியுடன் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
Mathi tamiloneindia; டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள் இணைந்த அணியை உருவாக்குவதில் பல கட்சிகள் தீவிரமாக உள்ளன. திமுக, தெலுங்கான்னா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியை இன்று காலை திருமாவளவன் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புகளில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக