செவ்வாய், 15 மே, 2018

எடியூரப்பாவா? குமாரசாமியா? - ஆளுநர் கையில் முடிவு! 78+38=116 இடங்கள் இருப்பதால் குமாரசாமி

நக்கீரன் :கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. இத்தேர்தலில் காங்கிர 78 இடங்களிலும் பாஜக 104 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 38 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா சந்தித்து பாஜக வேட்பாளர் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், காங்கிரஸ் கட்சி சித்தராமையா, மஜத குமாரசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதால், 78+38=116 இடங்கள் இருப்பதால் குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
 எடியூரப்பா, குமாரசாமி இருவரும் உரிமை கோரியுள்ள நிலையில், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என முடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது. தனிப்பெரும்பான்மை உள்ள கட்சி, கூட்டணி பலம் வாய்ந்த கட்சி என்ற வகையில் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது என்பதை ஆளுநர்தான் முடிவு எடுப்பார் என்று அரசியல் விமர்சகர் சுபாஷ் காஷ்யப் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக