ஞாயிறு, 20 மே, 2018

சேலம் பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ...

thetimestamil.:சென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை
சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை அமைப்பு பணிகளுக்காக 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் தொடங்கி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக அமையவுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 120 ஹெக்டர் அளவில் காடுகள் அழிக்கப்படும் என தெரிவந்துள்ள நிலையில், திட்டம் அமலாக்கப்பட்டால் அது மிகப்பெரும் சூழலியல் பேரரழிவாக அமையும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தத்திட்டத்தால் நிலங்களை இழக்க நேரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக