திங்கள், 28 மே, 2018

லஞ்சம் 5 லட்சம் முதல் தவணையாக தேனாம்பெடை உதவி ஆணையர் மாட்டினார்

tamilthehindu :இளைஞர் ஒருவர் தன் மீதும், தன் சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 லட்சம் முதல் தவணையாகத் தருவதாக தேனாம்பேட்டை உதவி ஆணையருடன் பேரம் பேசிய 3 ஆடியோக்கள் வாட்ஸ் அப்பில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை தேனாம் பேட்டை உதவி கமிஷனராக இருப்பவர் முத்தழகு. இவர் லிமிட்டில் சமீபத்தில் ராக்கெட் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையில் பிரகாஷ் என்பவரும் பிடிபட்டார். அவரைத் தவிர மற்றவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதில் சம்பந்தப்பட்ட இளைஞர் பேசுவதாக ஒருவர் தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகுடன் பேசுவதாக 3 ஆடியோக்கள் வாட்ஸ் அப்களில் உலா வருகிறது.
அதில் உள்ள உரையாடல்கள்:
ஆடியோ 1
அதிகாரி: ஆறு ஏழு வீடியோ கிளிப்பிங் இருக்குது எல்லாவற்றையும் அனுப்பிவிடட்டுமா?
இளைஞர்: தெரியும் சார். என் போனில் இருந்து எடுத்தது தானே சார். எனக்கு தெரியும் சார் என்னென்ன?
அதிகாரி: உன் போனில் எடுத்தது இல்லை, ஹா..ஹா…
இளைஞர்: சார் மேக்சிமம் சென்னைக்கு வருவேன் சார். உங்களை நேரில் வந்து பார்க்கிறேன் சார்.

அதிகாரி: தம்பி நீயெல்லாம் படிச்சவன், உன்னை நான் என்றாவது ஒருமையில் டேய், வாடா போடா என்று என்றாவது பேசி இருக்கிறேனா?
இளைஞர்: இல்லை சார், இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன் சாரைப் பார்க்கணும் என்று. வேணாம் சார், கோபமாக இருக்கிறீர்கள் என்று சொன்னார் அதனால் தான் சார் உங்களைப் பார்க்கவில்லை.
அதிகாரி: அவன் கான்ஸ்டபிளிலிருந்து வந்தவன்..
இளைஞர்: இன்ஸ்பெக்டர் சார் கிட்ட சொன்னேன், உங்களை நேரில் பார்த்து பேசணும் என்று சொன்னேன். நான் போனில் பேசிவிட்டேன். நீ கிளம்புன்னு சொல்லிட்டார் சார்.
அதிகாரி: தென் யூ கேன், யூ கேன்… டாக் டு ஹிம், த்ரூ ஹிம் யூ கேன் ஆஸ்க் டு ஹிம் வாட் ஹி இன்ஸ்ட்ரக்ட் யூ, டோண்ட் மைன்…
இளைஞர்: சார் உங்களை சந்திக்க வேண்டும் சார்?
அதிகாரி: ஒன்றும் வேண்டாம், நான் பார்க்க விரும்பவில்லை. நீ செய்தாய் செய்யவில்லை அந்த வெங்காயம் எல்லாம்… அது இரண்டாம் பட்சம், ஒரு பேசிக் கர்டஸி வேண்டாம்.
இளைஞர்: சார் இன்ஸ்பெக்டர் தான் தடுத்தார்
அதிகாரி: அடேய்… நீங்க எல்லாம் நம்ம ஜாதிக்காரனா பொறந்து வேஸ்டுடா, போங்கடா டேய்... போங்கடா…
இளைஞர்: சார் அப்படியெல்லாம் இல்லை சார், நீங்க கோபமா இருக்கீங்கன்னு தான்…
அதிகாரி: நான் கோபமாக இருந்திருந்தா நான் இங்க வந்தப்ப உங்களை எல்லா உள்ளே தள்ளி இருப்பேன்டா…உன் மாமன அங்கேயே தூக்கி அங்கேயே ரோட்ல போட்டு மிதிச்சு, நாய் மாதிரி இழுத்து வந்து ரிமாண்ட் பண்ணி அந்த கோபியை லாக்கப்ல கட்டிப்போட்டு போட்டோ எடுத்து பேப்பர்ல கொடுத்திருப்பேன்டா…
நான் அதெல்லாம் பண்ணல. ஆனால் நாய் மெச்சுன நாய்க்கு ஹெல்ப் பண்ண நான் தயாராக இல்லை. ஆனால் அதுக்கு சமமான ஆளுன்னு நீங்களும் நிரூபிச்சுட்டீங்களேடா… டேய் போங்கடா, ஐ ஃபெல்ட் ஸோ பேட்… நீங்க எனக்கு செய்றீங்க அதெல்லாம் அப்புறம். ஆனால் நீங்கல்லாம் வந்து….
இளைஞர்: சார் அடுத்த தடவை பார்க்கும் போது நாங்களும் சிறப்பா பண்ணுகிறோம் சார்.
அதிகாரி: இப்ப வேண்டாம், என்ன…உங்களுக்கு அந்த ஜாதி இது இருக்கும் என்று நினைச்சேன்…
இளைஞர்: சார் அப்படி எல்லாம் இல்லை சார், சுத்தி இருக்கிறவங்க சுத்திவிட்டுட்டாங்க சார்..
அதிகாரி: போங்கடா லூசுப்பயலுங்களா… மத்தவங்களை கேட்டா உங்களைத் தனியா உக்கார வச்சிப் பேசினேன். எவன் கிட்டேயும் நான் பேசினேனா?
இளைஞர்: இல்ல சார், நீங்க கோபமா பேசினீர்கள் என்பதால் அப்படி நினைச்சேன் சார்…
அதிகாரி: பின்ன என்ன உங்களை கூப்பிட்டு வச்சி கட்டி வச்சு முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பாங்கன்னு நினைச்சேயா? உன்னை அழைத்து ஆளுக்கு ரெண்டு பெக் ஊத்திக் கொடுத்து குடிப்பேன்னு நினைச்சியா?
இளைஞர்: இல்ல சார் அப்படி இல்ல சார்..
அதிகாரி: தென் வாட்,
இளைஞர்: நான் மீட் பண்ணணும்னு கேட்டேன் சார், நீங்க ரொம்ப கோபமாக இருக்கீங்கன்னு தான் நான் வரல சார்..
அதிகாரி: ஐ கே பினிஷ் யூ கைஸ், உங்க எல்லா பேரோட  கதையை அன்றைக்கே அனுப்பி, உன் மாமன தூக்கிட்டு வந்து ரிமாண்ட் பண்ணி, உன் அண்ணன் வரல என்பதை வைத்து எல்லா பயலையும் தூக்கியிருப்பேன்.
என்னுடைய லவ்லி, லவ்வபிள் டிசி பெருமாள் தான் இப்ப கோயம்பத்தூர் கிரைம் டிசி, நான் சொன்னால் கொலை கூட செய்வார் அந்த டிசி. உன் அண்ணன் கேசு அங்க தான் இருக்கு. என் குருநாதர் தான் இப்ப சேலம் கமிஷனர். என்னிடம் உள்ள வாட்ஸ் அப்பை எல்லாம் அனுப்பினால் லைஃப் லாங்கா நீங்கள்லாம் வெளியவே வர முடியாது. நான் எதையுமே பண்ணலையே
இளைஞர்: நீங்க எங்களுக்கு சாதகமா செய்திருக்கிறீங்கன்னு எனக்கு கட்டாயம் தெரியும் சார்.
அதிகாரி: போங்கடா டேய், நீங்க பண்ணது எனக்கு ஒன்லி பிஸ்கெட். ஆனால் அதைக்கூட நீங்க செய்யலியேடா? ஒரு மரியாதைக்கு கூட சொல்லாமல் போனீங்களேடா..
இளைஞர்: சார் அப்படி எல்லாம் இல்ல... அடுத்த வாரம் கட்டாயம்வருகிறோம் உங்களை வந்து பார்க்கிறேன் சார்..
அதிகாரி: போங்கடா டேய், அயோக்கிய பயலுகளா போங்கடா…
முதல் ஆடியோ முடிகிறது.
ஆடியோ-2
அதிகாரி: ஹலோ
இளைஞர்: சாரி டு டிஸ்டர்ப் யூ சார், சார் ஒரு தடவை உங்களை நேரில் பார்த்து பேசினால் ஐ வில் கிளியர் சார்.
அதிகாரி: வேண்டாம், நான் பார்க்க விரும்பவில்லை.
இளைஞர்: சார் நேர்மையாகச் சொல்கிறேன், என்னுடைய நிலைமையைக் கேட்டீர்கள். நான் சொல்லிவிட்டேன்.
அதிகாரி: தம்பி உன் வயசு என் சர்வீஸ் தம்பி. உன்னுடைய எல்லா வித்தையும் என் கிட்ட இருக்கு. நான் ஒருத்தர்கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது சொன்னேன். எவ்வளவு தகுதி உள்ள ஆட்கள் இவர்கள் என்று சொன்னேன். இதைச் செய்யணும் என்றால் நான் இரண்டு மாதத்துக்கு முன்னே பிடித்து உள்ளே போட்டிருப்பேன் இல்லையா?
இளைஞர்: ஆமாம் சார் எனக்குப் புரிகிறது சார்.
அதிகாரி: இதை ஏன் எனக்கு அன்றே பண்ணத் தெரியாதா?
இளைஞர்: போன் பாஸ்வார்ட் இப்ப வரைக்கும் தெரியாது சார், ஏன்னா அது என் பிரதரின் போன் சார்.
அதிகாரி: என் கண்டிஷன் என் ஸ்டேட்டஸ் பற்றி உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் முயற்சி செய்து பார்.
இளைஞர்: போன் பற்றி சத்தியமா எனக்குத் தெரியாது சார்.
அதிகாரி: யாராவது நம்புவாங்கன்னு தெரிந்தால் நீ நினைத்தால் செய்து பார்.
இளைஞர்: சார் சத்தியமா பொய் சொல்லணும்னு இல்ல சார்.
அதிகாரி: அதெல்லாம் வேண்டாம் பிகாஸ்… நான் வைத்துள்ள போட்டோக்கள் எல்லாம் அதில் இருக்கிற விஷயம் ரெண்டு மாசத்துக்கு முன்னே தெரியும். என்ன, இன்னைக்கு சரின்னு சொல்லிட்டு நீ வர்றேன்னு சொல்ற. அவங்க பாவம் சின்ன பசங்க தெரியாம சிக்கிக்கிட்டாங்கன்னு நான் சொன்ன நேரத்தில் இல்ல சார் நீங்கதான் பாவம்னு சொன்னாங்க.
இளைஞர்: சார் அப்படியெல்லாம் இல்ல சார், சார் நான் அந்த போனின் பாஸ்வர்டை என் பிரதரிடமாவது கேட்டு வாங்கி கொடுத்து விடுகிறேன் சார்.
அதிகாரி: ரைட் ஓக்கே அது ஒன்னும்… ஸீ… நான் வேண்டும் என்றால் இதெல்லாம் கையில் உள்ள ரசீதெல்லாம் அந்த வக்கீல் குரூப் கையில் கொண்டு போய், இது மாதிரி இருக்கு எனக்கு கொடுய்யான்னு கேட்டால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் உடனே கொடுப்பார்கள். என்ன…நான் பிசினஸ்மேன் இல்லை. இதைச் செய்யணும் என்றால் எப்போதோ நான் செய்திருப்பேன்.
இளைஞர்: சார் நீங்கள் கிரேட் மேன் எங்களுக்கு தெரியும்.
அதிகாரி: ஈவன் என் இன்ஸ்பெக்டர் கிட்ட கூட கொடுக்கமாட்டேன், எனக்கு தெரியும் என் இன்ஸ்பெக்டர் ஸ்டேட்டஸ் பற்றி தெரியும். ஆனால் நீங்கள் என் நம்பிக்கையை உடைத்து விட்டீர்கள் என்பது தான் வருத்தமா இருக்கு.
இளைஞர்: சார் நாங்கள் என்றைக்கும் அப்படி நடக்க மாட்டோம் சார்
அதிகாரி: இட்ஸ் ஓக்கே, இட்ஸ் ஓக்கே… நான் நைட் ரவுண்ட்ஸ் கிளம்பிக்கிட்டு இருக்கேன். சுற்ற ஆரம்பித்து விடுவேன். ஓக்கே பார்க்கலாம்.
இளைஞர்: நன்றி சார்.
ஆடியோ முடிகிறது.
ஆடியோ- 3
இளைஞர்: ஹலோ
அதிகாரி: மிட் நைட்டில் கூப்பிட்டுள்ளாய், நான் கூப்பிடும் போது எடுக்கவில்லை, நீ கூப்பிடும் சமயத்தில் நான் ஆஃப் செய்து வைத்துள்ளேன் போலிருக்கு.
இளைஞர்: இல்லையே சார் நான் கூப்பிடவில்லையே.
அதிகாரி: என்னது, மிட் நைட் 2.27-க்கு போன் செய்திருக்கிறாயே.
இளைஞர்: அப்படியா சார் தெரியவில்லை சார். சார் என்ன அமவுண்ட்டுன்னு சொன்னீங்கன்னா ரெடி பண்ணிடுவேன்.
அதிகாரி: எடுத்துட்டு நேரா முதலில் நீ வாப்பா, நீ என்னமோ பேசிக்கிட்டே இருக்க.என்னமோ இன்னைக்கு ஆரம்பிச்ச மாதிரி பேசிக்கிட்டே இருக்க.
இளைஞர்: இல்லை சார், எவ்வளவு அமவுண்டுன்னு சொன்னால் கரெக்டா கொண்டு வந்துவிடுவேன் சார்.
அதிகாரி: ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா?
இளைஞர்: என்ன சார்?
அதிகாரி: ஹா..ஹா.. அந்த ஹேமலதா கேஸ் கோயம்பத்தூர் கேஸ்ல நான் ஸ்பெஷல் ஆஃபிசரா உன் அண்ணனை அரெஸ்ட் செய்ய நியமிச்சிருக்காங்க.
இளைஞர்: அப்படியா சார் ஓ.கே. சார்
அதிகாரி: ஆமாம், உன் அண்ணனை அரெஸ்ட் செய்ய நானோ என் டீமோ வரப்போகிறோம். சீக்கிரமா, அந்த 60 லட்ச ரூபாய் கேஸிலும் என்னை நாமினேட் செய்திருக்கிறார்கள். முந்தா நாள் கமிஷனர் சொல்லி….நானோ என என் டீமோ வரும் அங்கு. உன் அண்ணன் அங்க உட்கார்ந்து ரோட்ல ஆட்டம் போடுகிறான்.
இளைஞர்: அப்படி எல்லாம் இல்லை சார், சார் இப்போதைக்கு ஒரு 3 லட்சம் கொண்டு வரவா?
அதிகாரி: என்னப்பா?
இளைஞர்: சார் இப்போதைக்கு ஒரு 5 லட்ச ரூபாய் கொண்டுவரவா?
மறுமுனை மவுனமாக இருக்கிறது… ரேஞ்ச் (சிக்னல்) இல்லை என்கிறார் இளைஞர்.
மீண்டும் போன் வருகிறது.
இளைஞர்: ஹலோ சார், இங்க ரேஞ்ச் (சிக்னல்) இல்லை சொல்லுங்க சார். சார் நான், வீட்ல பேசி 5 லட்சம் வாங்கி வரவா சார்?
அதிகாரி: அதை எல்லாம் வாங்கிட்டுப் போய் அந்த போலீஸ்காரன் இல்லன்னா அங்க இருக்கிற இன்ஸ்பெக்டர் விஜயகுமாருக்கு கொண்டு போய் கொடுங்க என்ன.
இளைஞர்: இல்ல சார் முதற்கட்டமா 5 லட்சம் கொண்டு வருகிறேன் சார். மீதி பேமண்ட் ஏற்பாடு செய்து தருகிறேன்.
அதிகாரி: அதெல்லாம் வச்சி நான்  டீ குடிக்கிறதா? ஏண்டா லூசுப்பயலுகளா?
இளைஞர்: சார் என்ன எதிர்பார்க்கிறீங்க அமவுண்ட் சொல்லுங்க சார்
அதிகாரி: யூ கம் ஸ்ட்ரெட் எ வே கம், நான் பெரிய கமிட்மென்ட்ல இருக்கேன், நான் வேறு ஒரு பிராப்ளத்தில் இருக்கிறேன். சீக்கிரம் வந்து, நாளன்னைக்கு காலையில வந்து பாருங்க. ஸ்டேஷனுக்கு வரவேண்டாம். யூ கம் சம் அரவுண்ட்…
இளைஞர்: சார் நான் அண்ணனைப் பார்க்க முடியவில்லை, அப்பாகிட்ட சொல்லி தான் அரேஞ்ச் பண்ணிட்டு வரணும்.
அதிகாரி: அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்லல என்ன? யூ கம் நியர் அண்ணா நகர் அண்ட் கால் மீ
இளைஞர்: சரி சார்.
ஆடியோ முடிகிறது.
இந்த ஆடியோ வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து தேனாம்பேட்டை உதவி கமிஷனரிடம் ’தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக