சனி, 5 மே, 2018

ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் இட மாற்றம்

‘ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் அதிரடி மாற்றம்விகடன்: ‘ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20
காவலர்கள் அதிரடி மாற்றம் கர்நாடக-தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ள கக்கனூர், டிவிஎஸ், அந்திவாடி, பூனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய 5 செக்போஸ்ட் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களைச் சோதனை செய்து, கட்டாய வசூல் செய்த 20 காவலர்களை இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளார் கிருஷ்ணகிரி எஸ்.பி., மகேஸ்குமார்.
பெங்களூருக்கு, கட்டுமானப்பொருள்கள், உணவுப் பொருள்கள், காய்கறிகள், பூக்கள் என எல்லாமே ஓசூரில் இருந்துதான் பெரும்பகுதி செல்கின்றன. அப்படிச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு, ஆயிரம் என்று கட்டாய வசூல் செய்து பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் செக்போஸ்ட் காவலர்கள். இதுகுறித்த புகார், எஸ்.பி.,மகேஸ்குமாரிடம் செல்லவே, 5 செக்போஸ்ட்களிலும் பணியாற்றும் 20 காவலர்களையும் வரவழைத்து விசாரணை செய்துள்ளார்.
அப்போது, ‘சார், நாங்க என்ன செய்ய முடியும். ஓசூர் டி.எஸ்.பி விஜய் கார்த்திக்ராஜ் ஒரு நாளைக்கு ஒரு செக்போஸ்ட்டுக்கு 4,000 வீதம், 5 செக்போஸ்ட்டுக்கு 20,000 மாமூல் கொடுத்தால்தான் செக்போஸ்ட் டூட்டி போடுகிறார்.

 இல்லை என்றால், வேறு காவலரை செக்போஸ்ட் டூட்டி போட்டு, எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிடுகிறார்” என்று நடந்த வசூல் வேட்டைக்கு விளக்கம் கொடுத்துள்ளனர் காவலர்கள். இந்த அதிர்ச்சித் தகவலைக் கேட்ட எஸ்.பி., மகேஸ்குமார், ‘இது சம்பந்தமாக ஏன் புகார் சொல்லவில்லை ‘என்று 20 பேரையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றிவிட்டு, தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள செக்போஸ்ட்களுக்கு புதியதாக 20 காவலர்களை டூட்டி போட்டுள்ளார். மேலும், ஓசூர் டி.எஸ்.பி விஜய் கார்த்திக்ராஜ்மீது துறைரீதியான விசாரணைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் எஸ்.பி. ஆனால், டி.எஸ்.பி., விஜய் கார்த்திக்ராஜ், மாவட்ட அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் அவரது பிஏ மூர்த்தியின் ஆதரவு இருக்கும் வரை என்னை எதுவும் செய்ய முடியாது என்று கூலாகப் பேசிவருகிறார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக