வியாழன், 17 மே, 2018

வடமராச்சியில் 1987ல் ராஜீவ் பிரபாகரனின் உயிர் காத்தார் ! ..பிரபாகரன் 2009ல் காக்கபட்டிருந்தாலும் .. பின் காத்தவரை என்ன செய்திருப்பார்?

Vallialagappan Alagappan : எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம்,
அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது
சரி அது ஏன் மே 17?
அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை
1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்?
ஈழதமிழர்
1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன?
அதுவும் தமிழர்
1986 வடமராட்சி கணக்கென்ன?
தெரியாது
அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது
ம்ம் ஆமாம் , காத்தது
அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17?
ம்ம் அன்றைக்கும் செத்தார்கள் , கருணாநிதி தடுக்கவில்லை
சென்னை முதல் வடமாரச்சி வரை எத்தனைமுறை பிரபாகரனை காத்தது இந்தியா? என்ன நன்றிகடன் இருந்தது
அதெல்லாம் பழைய கதை, கடைசியில் கலைஞர் காக்கவில்லை
ஏன் 1991ல் ஒரு சீட்டில் திமுகவினை அமர வைத்தார்களே மறக்க முடியுமா?
அதெல்லாம் போராட்டத்தில் சகஜம்
ஒஹோ, உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் அந்த யுத்தம் நின்றிருக்க வேண்டும்
ஆம் நிச்சயமாக, அந்த வீரபோராட்டம் தொடர்ந்திருக்க வேண்டும்
எத்தனை முறை பிரபாகரனை காப்பாற்றியது இந்தியா?
பலமுறை ..ம்ம் அப்படித்தான் காப்பற்றவேண்டும், அது கடமை
அது இருக்கட்டும் காப்பாற்றபட்டு என்ன முடிவுக்கு வந்தார்
வரமாட்டார், நாடு அடையாமல் ஓய்ந்திருக்கமாட்டார்
மண்ணாங்கட்டி 1980 முதல் கிட்டதட்ட 28 ஆண்டுகாலம் அடையாத நாட்டை அதன் பின் அடைந்திருப்பாரா?
அதெல்லாம் தெரியாது, யுத்தம் நின்றிருக்க வேண்டும் பிரபாகரன் உயிர்தப்பி இருக்க வேண்டும்

தப்பினால்
யுத்தம் தொடரும்
அதவாது கொன்று கொண்டே இருப்பீர்கள்
ஆமாம், யாரெல்லாம் குறுக்கே வருகின்றார்களோ அவர்களை எல்லாம் கொல்வோம்
ஆனால் சிக்கிகொண்டால் இந்தியா காப்பாற்ற வேண்டும்
ஆம் கண்டிப்பாக,...
அப்படி காப்பாற்றிவிட்டால் யாரையும் புலிகள் கொல்வர்
ம்ம் போராட்டம் என்றால் அப்படித்தான்
1987ல் வடமாராட்சியில் ராஜிவ் காத்த பிரபாகரன் பின் அவர்மேலே பாய்ந்தார், 2009ல் காக்கபட்டிருந்தாலும் பின் யார் மேல் பாயமல் இருப்பார்?
போராட்டம் என்றால் சாவுகள் தடுக்க முடியாதவை
ஒஹோ , யாராவது செத்துகொண்டே இருக்க வேண்டும், அதற்கு இங்கிருந்து ஊளை இட்டுகொண்டே இருக்க வேண்டும்
அது ஆதரவு
எத்தனயோ இடங்களில் ஈழதுயரம் நடந்தது அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17
அன்றுதான் புலிகள் முற்றிலும் அழிந்தனர்
இந்த டெலோ, புளாட், எபிஆரெல்ப், ஈரோஸ் இயக்கம் அழிந்த நாளெல்லாம் பற்றி பேசமாட்டீர்கள்
ஆமாம்
ஏனென்றால் அந்த இயக்கம் எல்லாம் புலிகளால் அழிக்கபட்டது
ஆமாம், அதனால் பேசமாட்டோம்
ஆக மே 17 புலிகள் அழிந்ததுதான் கவலை , மக்கள் அழிந்தது அல்ல‌, ஜூலை கலவரத்தில் செத்த தமிழருக்கு அஞ்சலி செலுத்தினீரா
இல்லை
யாழ்பாண கலவரத்தில் செத்தவருக்கு அஞ்சலி உண்டா?
இல்லை
இந்த அமைதிபடையாக சென்று செத்தானே 1500 இந்திய வீரன் அவனுக்கு என்றாவது அஞ்சலி செலுத்தினீரா
இல்லை
ஈழவிவகாரத்தில் தலையிட்டு செத்தாரா ராஜிவ், அவரோடு 17 பேர் செத்தார்களே தமிழர்கள் அவர்களுக்கு என்றாவது அஞ்சலி உண்டா
இல்லை
புலிகளால் கொல்லபட்ட தமிழர்களுக்கு என்றாவது அஞ்சலி உண்டா?
இல்லை
அமிர்தலிங்கம், பத்மநாபா, சபாரத்தினத்திற்கு ஒரு தீக்குச்சியாவது உண்டா
இல்லை
பின் என்ன மே 17?
எங்களுக்கு இந்தியாவினை, கலைஞரை எல்லாம் திட்ட ஒரே வாய்ப்பு இதுதான், இதிலும் புலிகளின் தவறை சொல்லவே மாட்டோம், இந்தியாவினை மட்டும் திட்டிகொண்டே இருப்போம், இதைவிட்டால் வேறு வாய்ப்பே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக