புதன், 2 மே, 2018

உலகின் அசுத்தமான நகரங்கள் முதல் 15 இடங்களில் 14 இடங்களை பிடித்த வட இந்திய நகரங்கள்.

Swathi K : இந்தியாவை குப்பையாக்கிய மோடி & கோ. உலகின் அசுத்தமான
நகரங்கள் பட்டியலில் முதல் 15 இடங்களில் 14 இடங்களை பிடித்த வட இந்திய நகரங்கள். மோடியின் தொகுதியான வாரணாசி உலகத்தின் மூன்றாவது அசுத்தமான நகரம் (check the image 1 & link 1).
முக்கியமான மேட்டர்.. ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணினேன்.. கிடைத்த தகவல்கள் கீழே..
1. 2015ல் உலகின் முதன்மையான 15 குப்பை நகரங்களில் 10 நகரங்கள் இந்திய நகரங்கள் (check the image 2 & link 2). அதுவே 2018ல் 14 இந்திய நகரங்கள் (அனைத்தும் வட இந்திய நகரங்கள்).. So நம்ம தூய்மையில் 2015ல் இருந்ததை விட மிக மோசமாக நிலையை நோக்கி நகர்ந்து இருக்கிறோம்.
2. மோடி தொகுதி வாரணாசி 2015 வரைக்கும் டாப் 20க்குள் இருந்தது இல்லை.. ஆனால் 2018ல் உலகத்தில் 3வது குப்பை நகரம் அது.. மறுபடி சொல்கிறேன் உலகத்தின் 3வது குப்பை நகரம் மோடியின் வாரணாசி.. ஆய்வுகள் என்ன செல்லுதுன்னா.. கங்கை முன்பு இருந்ததை விட அதிகமான அளவுக்கு குப்பை ஆறாக மாறி இருக்கிறது..

3. தூய்மை இந்தியா, கிளீன் கங்கா இப்படி திட்டங்கள் அனைத்தும் மெகா தோல்வி.. தோல்வியை விடுங்கள்.. இருந்த நிலையை விட மோசமான நிலைக்கு சென்று இருக்கிறோம்.. பல ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து இருந்த நிலையை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
வழக்கம் போல தூய்மை இந்தியா, கிளீன் இந்தியான்னு வெறும் வெட்டி விளம்பரம் மட்டும் செய்து பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்துள்ளனர்..
வாழ்க மோடி!!
வாழ்க புதிய இந்தியா!!
Reference:
https://www.ndtv.com/…/delhi-varanasi-among-14-indian-citie…
https://www.weforum.org/…/which-is-the-worlds-most-pollute…/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக