சனி, 21 ஏப்ரல், 2018

ராஜஸ்தான்.. திருமணத்திற்கு முதல் நாள் மனைவி ,தம்பி , தம்பியின் மனைவியை கொலை செய்தார் ..Man kills wife, brother hours before daughters' wedding


tamilthehindu :ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரத்தில் தன் மனைவி, தன் தம்பி, தம்பியின் மனைவி ஆகியோரை நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த நபரின் இரண்டு மகள்களின் திருமணம் நடைபெறவிருந்ததால் உறவினர்கள் அனைவரும் இந்த நபர் இவரது தம்பியின் வீடுகளில் உற்சாகமாக பேசி அரட்டை அடித்து விட்டு மகிழ்ச்சியுடன் இரவு தாமதமாகத் தூங்கி உள்ளனர். இந்நிலையில் தலா ராம் என்ற இந்த நபர் முதலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி கமலாவின் தொண்டையை அறுத்துக் கொலை செய்தார் பிறகு அருகில் இருந்த தன் சகோதரர் ரேவ்தா ராம் (35) வீட்டுக்குச் சென்று அவரையும் அவர் மனைவி ஹரியா தேவி (30) யையும் கொடூரமாக கொலை செய்தார் என்று பால்சூண்ட் காவல் நிலைய அதிகாரி பாக்கர் ராம் தெரிவித்தார்.

மூவரையும் ரத்த வெள்ளத்தில் கிடத்தி விட்டு 3 கிமீ நடந்து சென்று அங்குள்ள கிணற்றில் குதித்துள்ளார், ஆனால் தலாராமை சிலர் காப்பாற்றினர்.
திருமண வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாகப் பேசி அரட்டை அடித்து விட்டு உறங்கும் போது அதிகாலை 3-4 மணிக்கிடையில் தலாராம் இந்தக் கொலைகளைச் செய்யக் காரணமென்ன என்பது போலீசாருக்கே புரியாத புதிராக மாறியுள்ளது.
மாவட்ட எஸ்.பி. கவுரவ் யாதவ் கூறும்போது, “தலாராம் மனநோயாளி, கடந்த 6-7 மாதங்களாக அதற்காக மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறார்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்தப் படுபயங்கர கொலைகள் மணவீட்டை பிணவீடாக மாற்றியதோடு, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக