வெள்ளி, 6 ஏப்ரல், 2018

அரசியல் அனாதையல்ல தமிழகம் ! காவிரி போராட்ட செய்திகள் !

வினவு :தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 05-04-2018 அன்று தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட வியாபாரிகள் சங்கமும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கலந்து கொண்டது. நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், தமிழகம் தழுவிய அளவில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் என தமிழகமே போர்க்கோலம் பூண்டது. இதில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னை மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது. சென்னை மட்டுமல்லாது, தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

விருத்தாச்சலம்
மக்கள் அதிகாரம் விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். அனைத்து கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு பேருந்து நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
***
உடுமலைப்பேட்டை
***
சிதம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்  விருதை – சிதம்பரம் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக