திங்கள், 30 ஏப்ரல், 2018

தினகரன் - திவாகரன் மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது... வடகொரியா - தென்கொரியா ரேஞ்சுக்கு போகுமா?

  தினகரன் - திவாகரன், இடையேயான, மோதல்,முற்றுகிறது!  தினகரன் - திவாகரன், இடையேயான, மோதல்,முற்றுகிறது!. தினமலர்: அ.ம.மு.க.,வில் முக்கிய பதவி தராததால், திவாகரன் நேற்று, 'அம்மா அணி' என்ற புதிய கட்சியை துவங்கினார். இதனால், அதிர்ச்சி அடைந்த தினகரன், ''திவாகரனுக்கு, உடல்நலத்துடன், மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என, ஆவேசத்துடன் கூறினார். இதற்கிடையில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று சென்ற தினகரனை, 20 ரூபாய் நோட்டை காட்டி, பெண்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அவரது அக்கா மகனான தினகரனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் துவக்கிய, அ.ம.மு.க.,வில், திவாகரனுக்கும், அவரது மகனுக்கும் பதவிகள் வழங்காமல், புறக் கணித்ததே பிரச்னைக்கு காரணம். இதை அடுத்து, இருவரும் பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்கின்றனர். மாமா, மருமகன் இடையே நடக்கும் இந்த மோதல், சசிகலாவின் மற்ற உறவினர்கள் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.
Mani . V - Singapore,: இதென்னய்யா பெரிய வம்பா போச்சு வடகொரியா - தென்கொரியா பிரச்சினை மாதிரி. நம்முன்னோர்கள் பதவியையும், பணத்தையும் "மோகம்" என்று சொன்னது மிகச் சரியாகத்தான் இருக்கிறது

விமர்சிக்கின்றனர்.. இந்நிலையில், தினகரன் கட்சிக்கு போட்டியாக, 'அம்மா அணி' என்ற பெயரில், புதிய கட்சியை, திவாகரன் நேற்று துவங்கினார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், அம்மா அணி கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின், அவர் அளித்த பேட்டி:தினகரனால், அம்மா அணி இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல், அதற்கு உயிர் அளிக்கப்படுகிறது. இதில், இளைஞர்கள் அதிகம் சேர்க்கப்படுவர்.


இக்கட்சி, அறிவியல் பூர்வமாக சிந்தித்து, உயர்ந்தபட்ச அமைப்பாக செயல்படும். கட்சிக்கு, சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும்.எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே, அ.தி.மு.க.,வில் பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச்செயலர் ஆக்கியதில், எனக்கு முழு பங்கு உண்டு.ஜெயலலிதா பொதுச் செயலர் ஆனதும், நான் பரிந்துரைத்த நண்பர்கள், ஆதரவாளர்கள் கட்சி நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். அவர்கள், இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.


அப்படி இருப்பவர்கள், தினகரன் செயல்பாடு களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும், பொய், புரட்டு, மாயை.குடும்ப அரசியல் கூடாது என்கிறார்; குடும்பம் இல்லாமல், அவர் எங்கிருந்து வந்தார். சசிகலா வின் அக்கா மகன் என்பதால், தினகரனுக்கு, எம்.பி., பதவி கிடைத்தது. பின், சில காலம் அரசியலில் இருந்து காணாமல் போய் விட்டார். ஜெ., மறைவுக்கு பின், சசிகலாவை பிடித்து, துணைப் பொதுச் செயலர் பதவி வாங்கினார்.


தற்போது, தினகரனின் மனைவி மற்றும் மைத்துனர் வெங்கடேஷின் வழிகாட்டுதலில் கட்சி இயங்குகிறது. சமீபத்தில், வெற்றிவேல் கொடுத்த அறிக்கை, தினகரன் மனைவி கொடுத்தது தான். இதனால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.அவர்களை அரவணைக்கவே, இந்த கட்சி. இதில் நான், ஒருங்கிணைப்பாளாராக செயல்படுவேன். அடுத்த கட்டமாக, மாவட்டம், ஒன்றியம் வாரியாக, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.


தினகரன் கட்சியில், மாநில பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அனைவரும், தினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள். அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.இவ்வாறு திவாகரன் கூறினார்.


இடைத்தேர்தல்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியான சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த டிசம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், 'குக்கர்' சின்னத்தில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு, தினகரன் தரப்பினர், 20 ரூபாய் நோட்டை டோக்கனாக வழங்கி, வெற்றிக்கு பின், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக, குற்றசாட்டுகள் எழுந்தன.


இந்நிலையில், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் முருகன் கோவிலில், சாமி தரிசனம் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு, தினகரன் வந்தார்.இதையறிந்த, பெண்கள் உள்ளிட்ட தொகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலம் அருகே, 20 ரூபாய் நோட்டை காட்டி, தினகரன் காரை முற்றுகையிட்டனர்.


அப்போது, '20 ரூபாய் நோட்டு இங்கே; 10 ஆயிரம் எங்கே' என, கோஷங்கள் எழுப்பினர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், தினகரனை பத்திரமாக கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். பின், அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அவர்களை சமாதானம் செய்து ஓரங் கட்டினர்.கோவிலில் சாமி தரிசனம் முடிந்ததும், வைத்தியநாதன்பாலம் அருகே, தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தினகரன், 20 ரூபாய் நோட்டு ஆர்ப்பாட்டத்தால், மாற்று பாதையில் காசிமேடு சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டி:< எனக்கு எதிராக, 20 ரூபாய் நோட்டை காட்டி, ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பொதுமக்கள் அல்ல. மதுசூதனன் கைத்தடி ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வேலை இது. தோல்வி விரக்தியால், மக்களை கேவலப் படுத்த முயற்சிக்கின்றனர்.நாங்கள் பணம் தருவாக எந்த வாக்குறுதியும் தரவில்லை; 20 ரூபாய் நோட்டும் தரவில்லை. திவாகரன் விரக்தியில் உள்ளார். அவரது புதிய கட்சி குறித்து, பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு உடல் நிலையுடன், மனநிலையும் பாதிக்கப்பட்டது போல தெரிகிறது. திவாகரன் கூறுவதில் துளியும், உண்மையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


'விளைவுகளை ஏற்படுத்தாது'


தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் நேற்று சென்னையில் அளித்த பேட்டி:திவாகரன் சொல்லக்கூடிய, 'அம்மா அணி' என்ற ஒன்றே கிடையாது. அதற்காக, புதிய கட்சியையோ, அமைப்பையோ அவர்கள் துவங்க, நாங்கள் தடையாக இல்லை. ஆனால், அம்மாவின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்த முடியாது. இதை, உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் வழியாக, நாங்கள் உறுதி செய்துள்ளோம்.


திவாகரன் பேசுவது, அவர்களின் உறவுகளுக் குள் நடக்கும் போராட்டம். இதில், நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இது, எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்களது பிரச்னையை பூதாகர மாக்கவோ, அவற்றில் கவனம் செலுத்தவோ விரும்ப வில்லை.


முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், பன்மடங்கு உயர்ந்தவர்கள் என, திவாகரன் கூறியிருக்கி றார். கருத்துகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை, மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


'மக்களுக்கு பயனில்லை'


தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் துவங் குவதால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அதனால், அவர்களை பற்றி, எங்களுக்கு கவலையில்லை.தமிழக மக்கள் மனதில், அ.தி.மு.க., அரசு தான் இருக்கும். அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள்திருப்தியாக உள்ளனர்.

ஜெயகுமார், மீன்வளத்துறை அமைச்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக