புதன், 11 ஏப்ரல், 2018

வைகோ : கறுப்புக் கொடியைக் கண்டு அஞ்சுகிறீர்கள்; நெஞ்சுரம் இருந்தால் சாலையில் பயணிக்க தயாரா?- பிரதமர் மோடிக்கு சவால்

tamilhehindu :இந்தியாவில் இப்படி ஒரு பயந்தாங்கொள்ளி பிரதமரை
பார்த்ததில்லை, நீங்கள் ஒரு கோழை சாலையில் பயணிக்க தைரியம் இருக்கிறதா? என்று வைகோ சவால் விடுத்தார்.
சென்னையில் நடக்கும் ராணுவ கண்காட்சிக்கு வரும் பிரதமருக்கு
கருப்புக்கொடி காட்ட அனைத்துக்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதனால் பிரதமர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
“நாளைக்கு மோடி சென்னை வருகிறார், அவர் பெரிய தீராதி தீரர் அல்லவா, 36 இன்ச் பாடி வச்சிருக்கிற பயில்வான் அல்லவா. மோடி சாலையில் செல்லலாம் அல்லவா? வீராதி வீரரே.
இங்கிருந்து நேராக மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர், அங்கிருந்து ஐஐடிக்கு உள்ளே ஹெலிகாப்டர். அங்கிருங்து பக்கத்தில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு சுவரை உடைத்து ஒரு சாலை.
உங்களை மாதிரி பயந்தாங்கொள்ளி பிரதமர் இந்தியாவில் இதுவரை வந்ததே இல்லை ஐயா. நீங்கள் ஒரு கோழை.
கருப்புக்கொடியில் குண்டு வச்சி உங்களை சுடவா போகிறோம். உங்களைப்பற்றித்தான் சொல்கிறார்களே. அடேயப்பா அவருடைய பாடி லாங்வேஜைப் பார்த்தால் அப்படியே என்று பெருமையாக சொல்கிறார்களே.
நீங்கள் முசோலினி மாதிரி மாறிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால் முசோலினியின் தைரியம் உங்களுக்கு கிடையாது. இதுக்கே பயந்து போய் ஹெலிகாப்டருக்குள் நுழைந்து, அங்கே இருந்து ஒரு சுரங்கப்பாதை அமைத்து இங்க ஐஐடிக்குள் கொண்டு வந்து அங்கிருந்து அழைத்து போகப்போகிறீர்களா?
மிஸ்டர் மோடி நீங்கள் கருப்புக்கொடியை பார்த்து அஞ்சுகிறீர்கள். நீங்கள் நெஞ்சுரம் உள்ள பிரதமராக இருந்தால் சாலையில் வாருங்கள். வரமாட்டீர்கள். நாளை சந்திப்போம்.”
இவ்வாறு வைகோ பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக