திங்கள், 30 ஏப்ரல், 2018

தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிப்பு- திருமுருகன் காந்தி ஆவேசம்

டெல்டா வெப்துனியா :மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தது. மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் அந்த பகுதி மக்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ''தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது. எச்சரிக்கை கொள் தமிழா!'' என்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக