ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சத்யராஜ் : தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் ... திரையுலகின் மௌன போராட்ட களத்தில் ...


மாலைமலர்: திரைத்துறையினர் நடத்திய மவுன போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஸ்ரீ பிரியா, கஸ்தூரி, லதா, வரலட்சுமி சரத்குமார், சாய் தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். போராட்ட மேடையில் பலரும் பலவிதமான கருத்துக்கள் பேசக்கூடும் என்பதால் திரையுலகம் மவுன போராட்டமாக நடத்தியது. கடைசி வரை யாரும் பேசவில்லை. இந்த நிலையில் போராட்ட நிறைவில் தீர்மானங்களை வாசித்து முடித்ததும் திடீரென்று நடிகர் சத்யராஜ் எழுந்து மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். அவர் பேசியதாவது:- ‘நான் எப்போதும் தமிழர்கள் பக்கம், தமிழ் உணர்வின் பக்கம்தான் இருக்கிறேன். எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை.

எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டேன். ராணுவமே வந்தாலும் கவலைப்பட மாட்டேன். தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நில்லுங்கள். தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்கள், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம்’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக