புதன், 11 ஏப்ரல், 2018

ரஜினி மீது பாரதிராஜா தாக்கு: உங்கள் குரல் அல்ல அது டப்பிங் வாய்ஸ்; நீங்கள் ஒரு பூ நாகம்

tamilthehindu :ரஜினி போராட்டக்காரர்களை வாழ்த்தவில்லை எதிர்த்து கருத்து சொல்கிறார். அவர் ஒரு முழுநேர அரசியல்வாதியல்ல, அவர் ஒரு பூநாகம் என்று பாரதிராஜா கூறினார்.
நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்க்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாதுகாப்பு குழு அமைப்பின் சார்பில் பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எல்லோருமே உங்கள் பணியை சரியாக செய்தீர்கள் அடி வாங்கினீர்கள் தாக்கப்பட்டார்கள், எனக்கு வருத்தமாக இருந்தது. இன்று கூட பாருங்கள், ஆக்‌ஷன் இருந்தால் ரியாக்‌ஷன். எல்லோரும் சொல்கிறார்கள் வன்முறை நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறார்கள். அது வன்முறை அல்ல எதிர்வினை.
மிகவும் அறவழியில் நாங்கள் சென்றோம். ஆக்‌ஷன் அதற்கு ரியாக்‌ஷன், வினை இல்லாமல் எதிர்வினை வராது. எதிர்வினையை மட்டும் ஏன் பார்க்கிறீர்கள். ஆக்‌ஷன் இருந்ததால் தான் ரியாக்‌ஷன் இருந்தது.
வினை என்னவென்று ஊடகங்கள் கூற வேண்டும். பூதாகரமாக எதிர்வினையை கூறக்கூடாது. வினையை என்னவென்று சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு புரியும். நீங்களும் எங்களில் ஒரு பகுதி. மிகத்தலையாய பகுதி ஊடகங்கள் கையில் உள்ளது.

பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவது நிச்சயம். எங்கள் எதிர்ப்பை, உணர்வை, வலியை காட்ட நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துக்கொடுத்திருந்தால் நாங்கள் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்திருப்போம். இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் மத்தியிலும் இந்த மண்ணில் நீங்கள் எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் எங்கள் உணர்வை காட்டும் வகையில் கருப்புக்கொடி காட்டுவோம். எங்கேன்னு சொல்கிறோம். எப்படி என்று கேட்காதீர்கள்.
விமான நிலையத்தில் கருப்புக்கொடி காட்ட உள்ளோம். அவர் விமானம் வழியாக போகிறார், போகட்டும் எங்கள் உணர்வை காட்டுவோம். நீங்கள் பிரதமரை காட்டும் போது கருப்புக்கொடி காட்டும் எங்களையும் காட்டுவீர்கள் அல்லவா? நாங்கள் அதற்காக அவருடன் பறந்தே செல்ல முடியாது அல்லவா?
20-ம் தேதி அடுத்த ஐபிஎல் போட்டி எப்படி இருக்கும்?
வேறுவிதமாக இருக்கும்.
ரஜினிகாந்த் காவலர்கள் தாக்கப்பட்டதை கண்டித்துள்ளார், பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை, போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கவில்லையே?
அதைத்தான் நீங்களே சொல்லிவிட்டீர்களே, அவ்வளவு பேர் தாக்கப்பட்டபோது அவர் கண்டிக்கவில்லை, கைது செய்யப்பட்ட பாரதிராஜா பற்றி பேசவில்லை. முன்பு காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு வாகன எண் கொண்ட வாகன ஓட்டுனர்களை டோல்கேட்டில் வைத்து தாக்கினார்களே என்ன செய்தார்.
கேபிஎன்னுக்கு சொந்தமான 200 பேருந்துகள் எரிக்கப்பட்டபோது என்ன சொன்னார், அதெல்லாம் வன்முறையாக தெரியவில்லையா. நான்கு நாட்களுக்கு முன் தினம் கூட ஒரு வாகன ஓட்டுனரை தாக்கி குத்துகிறார்களே அது அவர் கண்ணுக்கு தெரியவில்லையா. குரல் கொடுக்கவில்லையே. அது வன்முறையாக தெரியவில்லையா.
இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம், இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது தெரிகிறது. ஒன்றுமில்லை. ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடினார்களே அதை பாராட்டி இருக்க வேண்டாமா? ரஜினி இப்போது வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் உன்னுது, டப்பிங் யாரோ பேசிக்கிட்டு இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் கருத்துக்கு இன்று தமிழிசை வரவேற்கிறார், ஆனால் சில நாட்கள் முன்பு 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்க வரும் போது நாங்கள் நினைத்திருந்தால் நீ எப்படி சம்பாதித்திருப்பாய்  என்று தமிழிசை கேட்கிறார்.
நீங்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளவில்லை. தன்னை அரை அரசியல்வாதியாகத்தான் அவர் சொல்லிக்கொள்கிறார். அவர் முதலில் அரசியலில் இறங்கி நடக்கட்டும். அப்புறம் அவர் ஒழுங்கா நடக்கிறாரா? இல்லையா என்று நாங்கள் சொல்கிறோம்
இவ்வாறு பாரதிராஜா பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக