திங்கள், 23 ஏப்ரல், 2018

சென்னையில் வடஇந்திய கொள்ளையன் அட்டகாசம் .. துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை ...

துப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்மாலைமலர் :சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி வடநாட்டு கொள்ளையன் ரூ.7 லட்சம் கொள்ளையடித்து பின்னர் போலீசில் சிக்கியுள்ளான்.   சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் அங்கு உள்ளவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதனை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, அங்குள்ள மற்றொரு வங்கியில் கொள்ளையடிக்க அவர் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த அடையாறு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக