திங்கள், 30 ஏப்ரல், 2018

பாக். வம்சாவளி எம்பி சஜித் ஜாவித் பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக நியமனம்

பாக். வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி சஜித் ஜாவித் பிரிட்டனின் புதிய உள்துறை மந்திரியாக நியமனம்மாலைமலர் : பிரிட்டன் உள்துறை மந்திரியாக இருந்த ஆம்பர் ரூத் பதவி விலகியதை அடுத்து, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.யான சஜித் ஜாவித் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். #UK #SajidJavid லண்டன்: இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.


நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.


அதிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக ஆம்பர் ரூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.யான சஜித் ஜாவித் புதிய உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் மேயராக உள்ள சாஹித் கானும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #UK #SajidJavid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக