சனி, 21 ஏப்ரல், 2018

கலைஞரை சந்தித்த வங்க மாநில உரிமை போராளி கோர்கோ சட்டர்ஜி !

கருணாநிதியை சந்தித்த வங்க மொழிப் போராளி!Dr. Garga Chatterjee :If the Tamils had their fully sovereignty, he would have been a world leader.
மின்னம்பலம்: முதுமையால் உடல் நலம் குறைந்து தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை, வீடு தேடி வந்து சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வங்காள மொழியின் செறிவு மிக்க படைப்பாளியான கோர்கோ சாட்டர்ஜி.
கோர்கோ சாட்டர்ஜி வங்க மொழிக்காகவும், வங்காளிகளுக்காகவும் போராடி வரும் படைப்புப் போராளி. மொழியுரிமை நிகர்மை இயக்கத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், வங்க தேசிய இனச் செயற்பாட்டாளராக பரவலாக அறியப்படுபவர். இவரது, ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்ற நூல் தமிழில் இன்று (ஏப்ரல் 21) மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆழி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. இதற்காகவும் ஏப்ரல் 19-ம் தேதி நடந்த நீட் எதிர்ப்பு மாநாட்டுக்காகவும் சென்னை வந்தார் கோர்கோ சாட்டர்ஜி.  http://www.newagebd.net/article/24505

கடந்த 18-ம் தேதி இரவு கொல்கத்தாவில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கோர்கோ சாட்டர்ஜி, தனது நண்பரும் தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஆழி.செந்தில்நாதன், சரவணன் ஆகியோரோடு நேராக சென்ற இடம் கோபாலபுரத்தில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம். அப்போது இரவு பத்து மணி.

முதல் மாடியில் தனது நாற்காலியில் கருணாநிதி அமர்ந்திருக்க, தனது, ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்ற நூலை கருணாநிதியிடம் கொடுத்து, குனிந்து கால்களைத் தொட்டார். மொழிக்கான போராட்டத்துக்காக உலகறியப்பட்டது தமிழினமும், வங்க இனமும்தான். அந்த அலை நீளத்தில் கருணாநிதியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் கோர்கோ.
சரவணன் கோர்கோவை கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் முகத்தில் இந்த இளம் வங்க மொழிப் போராளியைப் பார்த்து சில மாறுதல்கள் தென்பட்டன. உடன் சென்ற ஆழி.செந்தில்நாதன், ‘அண்ணாவின் பணத்தோட்டத்தை வெளியிடுகிறோம்’ என்று கருணாநிதியிடம் கூறினார். தமிழும் வங்காளமும் தழுதழுத்த இந்த சந்திப்பு பத்து நிமிடங்கள் நீடித்தது.
கருணாநிதியைத் தேடி வந்து சந்தித்த இந்த வங்காள மொழிப் போராளி இன்று தனது நூல் வெளியீட்டு விழாவில் இந்த சந்திப்பு குறித்து ஏதேனும் பேசலாம்!
கோர்கோ சாட்டர்ஜியின், ‘உன் பேரரசும் என் மக்களும்’ நூலைப் பற்றி மின்னம்பலத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் சுட்டி இதோ... உன் பேரரசும் என் மக்களும்

1 கருத்து:

  1. Great to see Garga chaterji. All Bengal people must speak their own language,don't speak Hindi or any other language ignoring own language.This is the important way to protect the life of your own mother tongue.

    பதிலளிநீக்கு