ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குஜராத்திலும் தொடரும் சிறுமிகள் பாலியல் கொலைகள்

Special Correspondent FB Wing :காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொடூரமாக கொலை செய்யப்பட்டது அடங்குவதற்கு முன் குஜராத் மாநிலத்தில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் பஹிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் காயங்களுடன் கிடந்த சிறுமி உடலை கடந்த 6ம் தேதி போலீசார் கைபற்றினர். பரிசோதனையில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
8 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாகவும் உடலில் 86 காயங்கள் உள்ளதாகவும் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா ஒருவாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் நாடு முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் அதைபோல் சம்பவம் நடந்திருப்பது பெண்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பலாத்காரம் https://www.splco.me/…/1mseidhigal/Apr18/140418ta1.htmசெய்து கொலை, உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமி பலாத்காரம், குஜராத்தில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை என பாஜக மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களில் சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது அக்கட்சி தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக