ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ரஜினி காந்த் : மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைக்கவில்லை

மாலைமலர்: சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட்
ஆலையை மூட வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மவுன போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன் வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.
வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும். கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை மூடிதான் ஆகவேண்டும். இப்போதைக்கு, தனியாக போராட்டம் எதுவும் நடத்தப்போவதில்லை. ஐ.பி.எல் போட்டிகளின் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடுமுழுவதும் கவனத்தை பெறலாம் என அவர் பேசினார். இதனை அடுத்து போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் சென்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக