ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

மாணவிகளை ஆளுநர் வி ஐ பிக்களுக்கு பாலியல்.... பெண் பேராசிரியர் .. ஆடியோவில் தெளிவாக கவர்னர் லெவல் என்று கூறுகிறார்.. தமிழ்நாடு

Lakshmi Priya - Oneindia Tamil விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு இத்தனை அழகாக கணக்கு சொல்லிக் கொடுத்திருப்பாரோ இல்லையோ, ஆனால் பாலியல் தொழிலை கனகச்சிதமாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சொல்லி கொடுக்கும் ஆடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. 
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. 
A College professor teaches and invites students- audio goes viral இவர் சில மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு வருமாறு மிகவும் ஜாக்கிரதையாக அழைக்கிறார். அதாவது மாணவிகளிடம் நேரடியாக விஷயத்தை கூறவும் கூடாது, ஆனால் அவர்களாகவே விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நிர்மலா தேவி மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.
கல்வி போதிக்கும் ஆசிரியை இப்படி காமத்தை போதிக்கலாமா. வேலியே பயிரை மேயலாமா என நெட்டிசன்கள் பொங்குகின்றனர். மேலும் இத்தனை அழகாக பாலியல் தொழிலை போதிக்கும் இவர்கள் கல்வியை இந்த முறையில் போதித்திருந்தால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இதுபோல் பேச வேண்டிய அவசியமே இல்லையே. 
நானும் ஏற்கெனவே போயிருக்கிறேன், அதனால் பயப்படாதீங்க என்றும் நிர்மலா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளிடம் அழகாக பாலியல் கல்வியை போதிக்கும் அந்த ஆடியோவை நீங்களும் கேளுங்களேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக