வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இதுதான் இந்தக் கொடியவர்களின் ராமராஜ்ஜியம்!


Mathava Raj : படிக்கவே முடியாமல் பதற வைக்கிறது.
அஸிஃபா!
எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் போதெல்லாம் கடுமையான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள்.
சஞ்சிராம் என்னும் வருவாய்த்துறை அதிகாரி திட்டமிட, அவனது மகன், அவனது மருமகன், அவர்களின் நன்பனொருவன் சேர்ந்து இந்த சகிக்க முடியாத கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரியும் உடந்தை.
பின் தங்கிய அந்த முஸ்லீம் சமூகத்து மக்களை பயமுறுத்தி, அந்த நிலங்களை விட்டுத் துரத்துவதே இந்த பயங்கரத்தின் பின்னணி.
காணாமல் போன அஸிஃபா, உடலெல்லாம் சிதைக்கப்பட்டு காட்டிலிருந்து கண்டெடுக்கப்படுகிறாள். பாவப்பட்ட பெற்றோரும் அந்தப் பகுதி மக்களும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறார்ர்கள். துப்பு கிடைத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். பண்டிட்கள் பிஜேபியின் தலைமையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊர்வலம் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் பார் அசோஷியேஷனும் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.

தன் வீட்டு மட்டக் குதிரைகளின் பசியாற்றுவதற்காக, புல்லறுக்கச் சென்ற சிறுமி அஸிஃபாவின் உடல் மீது இந்துத்துவாவின் வன்மம் கோர தாண்டவமாடி இருக்கிறது. பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக் குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள்.
இங்கே யார் தீவீரவாதிகள்?
ஜம்மு காஷ்மீரில் முஸ்லீம் குழந்தையை வன்புணர்வு செய்த இந்த கொடுமைக்காரக் கும்பலைச் சேர்ந்த உத்திரப் பிரதேச பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவன் அங்கே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறான்..
புகார் அளித்த அப்பெண்ணின் தந்தையை விசாரணைக்கு அழைத்து போலீஸ் நிலையத்திலேயே அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
சகல நீதி நியாயங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து, இரக்கம், மனிதாபிமானம் எதுவுமில்லாமல் இப்படியொரு அராஜகத்தை செய்த பிஜேபி எம்.எல்.ஏ இப்போது வரை கைது செய்யப்படவில்லை.
தேசம் முழுவதும் இது குறித்து அதிர்ச்சியும், கோபமும் எழுந்து கொண்டு இருக்கின்றன. இந்த அயோக்கியக் கட்சியின் பிரதமர் மோடி இந்த நிமிடம் வரை திறக்கவில்லை.
இதுதான் இந்தக் கொடியவர்களின் ராமராஜ்ஜியம்!
வரலாற்றின் குப்பைக்கூடையில் பிணங்களாக இந்த அயோக்கியர்களையும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிற ராமனையும் சேர்த்தே தூக்கி எறிய வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக