ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி டாக்டர்களும் இனி நவீன அறிவியல் மருத்துவம் பார்க்கலாம்? அனுமதிக்கும் சட்ட மசோதா..

Sivasankaran Saravanan : ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி படித்தவர்களை
நவீன அறிவியல் மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது!
இதற்கு பாஜக அரசு சொல்லும் காரணம், நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது எனவே மற்ற மருத்துவமுறைகளை பயின்றவர்களுக்கு Bridge course படிக்கவைத்து அவர்களையும் எம்பிபிஎஸ் டாக்டர் அளிக்கும் சிகிச்சையை அளிக்கச் செய்வது!
நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது உண்மையே! ஆனால் அதற்கு அரசு என்ன செய்யவேண்டும்? தமிழ்நாடு போல அதிகளவில் அரசு மருத்துவக்கல்லூரிகளை நிறுவி எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கவேண்டும்! அதைவிட்டுவிட்டு மாற்று மருத்துவ முறைகளை படித்தவர்களை எம்பிபிஎஸ் டாக்டர் அளிக்கும் சிகிச்சையை வழங்க அனுமதிப்பது எந்த விதத்தில் தீர்வாகும்?
இதே பாஜக அரசு தான், நாட்டில் தரமான மருத்துவர்கள் இல்லை, எனவே நீட் மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என்கிறது! ஆனால் மற்ற மருத்துவமுறை மருத்துவர்களை எம்பிபிஎஸ் டாக்டருக்கு இணையாக பணி புரியச் சொல்வது எவ்வாறு தரமான மருத்துவ வழிமுறையாக இருக்கமுடியும்? ஏதாச்சும் ஒரு பக்கம் ஆட்டனும்!

அடுத்தபடியாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல அலோபதி வேஸ்ட்டு, தங்களது ஹோமியோ சித்தா ஆயுர்வேதம் தான் சிறந்தது என கம்பு சுற்றுபவர்கள் எப்படி வெட்கமே இல்லாமல் இப்போது நவீன அறிவியல் மருத்துவமுறையில் சிகிச்சையளிக்க உடன்படுகிறார்கள்?
ஆக மொத்தத்தில் தேசத்தின் மருத்துவ சேவையின் தரத்தை நாசமாக்க இன்றைய பாஜக அரசு முடிவுசெய்துவிட்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக